
சாத்தையாறு அணை பகுதியில் வசிக்கும் சின்னவீரன் என்பவர், தாட்கோ திட்டத்தில் வழங்கப்பட்ட நிலத்திற்கு இலவச மின்சாரம் கேட்டு, மனைவி கிருஷ்ணம்மாள் பெயரில் சமயநல்லூர் தலைமை செயற்பொறியாளருக்கு மனு செய்திருந்தார்.
25ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரரை அழைத்த செயற்பொறியாளராக இருந்த கென்னடி, "உங்களுக்கு விவசாயத்திற்காக இலவச மின்சாரம் தர அரசு உத்தரவு வந்துள்ளது. அதற்காக 5,000 ரூபாய் தரவேண்டும்' என கேட்டார். "2,000 ரூபாய் மட்டுமே தரமுடியும்' என்று கூறிய சின்னவீரன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி நேற்று காலை 11.45 மணிக்கு, மதுரை லஞ்ச ஒழிப்பு குழுவினர், பாலமேடு மின்வாரிய அலுவலகம் வந்தனர். சின்னவீரன் கொடுத்த 2,000 ரூபாயில், 1,500 ரூபாயை, தான் எடுத்துக் கொண்டு, கமர்சியல் இன்ஸ்பெக்டர் சுப்பன் என்பவரிடம் 500 ரூபாயை தந்தபோது, போலீசார், இரண்டு பேரையும் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக