புதியவை :

Grab the widget  Tech Dreams

05 பிப்ரவரி 2010

டிராபிக் சிக்கலால் டூவீலரில் சென்ற ஜி.கே.வாசன்


திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் கௌதமி - கார்த்திக் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. நேற்று மாலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திச் சென்றார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று கலந்து கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற ஜிகே.வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். ஜி.கே.வாசன் பயணம் செய்யும் விமானம் சரியாக 11.40 மணிக்கு புறப்பட்டு விடும் என்பதால் விரைவாக கார் சென்றது.

திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் ஜி.கே.வாசன் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.

இந்த போக்குவரத்து நெருக்கடியில் ஜி.கே.வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் காரில் இருந்து இறங்கினார்.


திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறினார். உடனே அந்த மோட்டார் சைக்கிள் திருச்சி விமான நிலையம் நோக்கி பறந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மோட்டார் சைக்கிளில் செல்வதை கட்சியினர் பார்த்ததும் அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தனர். போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பாக சென்றனர்.

டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக