புதியவை :

Grab the widget  Tech Dreams

19 பிப்ரவரி 2010

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை மாலையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக இப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையொட்டி, துணை ஆய்வுக் குழு அதிகாரி விஜயராஜன் தலைமையிலான குழுவினர் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு மாலை 6 மணியளவில் சென்றனர். இக் குழுவில் டி.எஸ்.பி. வி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக் குழுவினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது. சார்-பதிவாளர் அலுவலகத் துணைப் பதிவாளர் அல்லி அரசி கைப்பையிலிருந்த கைப்பற்றப்பட்ட தொகையும் இதில் அடங்கும். இதுகுறித்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுவோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக