திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், நடிகர் அஜீத்தை தவிர 14 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதப்படி 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 18.02.2010 அதிகாலை சுமார் 2 மணி அளவில் என் வீட்டுக் கதவை யாரோ சத்தமாக தட்ட எனது மகனும், கதாநாயகனுமான சிரஞ்சீவி, யார் என்று கேட்டுக்கொண்டு கதவு இடைவெளி வரியாக பார்த்துள்ளார். அப்பொழுது சுமார்பதினைந்து நபர்களுக்கு மேற்பட்டு கையில் பட்டாகத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு நடிகர் அஜீத்தின் மேலாளர் தலைமையில், மாவட்டச் செயலாளர், அஜீதின் உதவியாளர் மற்றும் சுமார் 15க்கு மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் கெட்ட வாத்தையில் திட்டிக்கொண்டு இருந்தார்கள்.
என் மகன் என்ன வேண்டும் என்று கேட்பதற்குள் ''ஜாக்குவார் வெளியே வாடா. உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு'' என்று கூறி கட்டையால் ஜன்னல்கள் அடித்தார்கள். உடனே ஒருவன் ''அட நாட்டான், அண்ணாச்சி பலசரக்கு கடைக்கே இவ்வளவுவா'' என்று ஏலனமாக கேட்டுள்ளான்.
உடனே எனது மகன் வீட்டிற்குள் ஓடி போன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை எனக்கு தெரிவித்தான். அப்பொழுது நான் மதுரையில் சூட்டிங்கில் இருந்தேன். உடனே எனது மகனிடம் கதவை திறக்காதே. எதுவாயிருந்தாலும் நாளை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டேன். என் மகன் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கம்பி, கட்டையை வைத்து எனது ஸ்கார்பியோ காரை அஜீத்தின் மேனேஜர், தென் சென்னை அஜீத் மன்ற தலைவர், அஜீத்தின் உதவியாளர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கார் கண்ணாடி மற்றும் அனைத்து விளக்குகளையும் அடித்து உடைத்து, காரையும் சேதப்படுத்தி விட்டார்கள். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.
உடனே நான் மதுரையில் இருந்து சென்னைக்கு காலை விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் மதியம் 2.20 விமானத்தில் சென்னை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து உடனே என் வீட்டிக்குச் சென்று நடந்தவைகளை நேரில் பார்த்தேன். உடனே எனது மகனுக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி விட்டு சேதாரங்களை பார்த்து விட்டு இந்த புகார் மனுவை தங்களிடம் அளிக்கிறேன்.
சினிமாவில் இருக்கும் அனைத்து கதாநாயன், கதாநாயகி, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், சக நடிகர்கள் உடன் அன்பாகவும், கண்ணியமாகவும் பழக கூடியவன் நான். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நான் சேர்த்து வைத்த புகழையெல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்úôடு, நண்பர் அஜீத் அவர்களின் நேரடியான தூண்டுதலின் பேரில் அவருடைய மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் 2 மணிக்கு என்னையும், என் குடும்பத்தாரையும் தாக்கி, கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்து கேவலமாக பேசி கெட்ட வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களுடன் என் வீட்டையும், என் காரையும் தாக்கி சேதாராம் ஏற்படுத்திய அஜீத் உள்பட அனைவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தியாகராய நகர் துணை கமிஷனர் பெரியய்யாவை உடனடியாக தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் மனுவையும் அவரது வீட்டையும், காரையும் சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களையும் துணை கமிஷனர் பெரியய்யாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இந்த புகாரை விசாரித்த உயர் அதிகாரிகள், ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகாரில், அஜீத் பிரச்சனை நடந்த இடத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளால், அவரைத் தவிர 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர்.
நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அஜீத்தின் மானேஜர், உதவியாளர், ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துளது. புலன் விசாரணைக்கு பிறகுதான் அஜீத்திற்கு தொடர்பு உள்ளதா என்பதை முடிவு செய்து அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது.
பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தது, கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அந்த 14 பேரும் ஜாமீனில் கூட வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
_________________________________________________________________
சாதியை இழுக்கும் ஜாக்குவார் தங்கம் , தமிழ் படஉலகில் இதுவரை சாதியோ , மதமோ நுழைந்தது இல்லை முதன் முறையாக இப்போது நுழைக்க பார்க்கிறார் ஜாக்குவார் தங்கம்! இந்த மோசமான முன் உதாரணத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழ் பட உலகம் முன் வர வேண்டும் .இல்லாவிட்டால் வரும் காலங்களில் ஒவ்வொரு திரைப்பட கலைங்கருக்கு பின்னும் ஒரு சாதி சங்கம் போராட்டம் தொடங்கிவிடும்.
ஜாக்குவார் தங்கம் , அஜித்திற்கு எதிரான சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு அஜித் தன்னை மாற்றி கொள்ள முயற்சியை மேற்கொள்ள வேண்டும் ''அஜீத் தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தமிழ் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படி இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், போராட வரமாட்டாயா?''
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக