அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க, பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் ஊழலைக் குறைக்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததில் ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் மற் றும் அரசியல்வாதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு வழிவகை செய்யும் மசோதா, 2008ல் பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதை, மத்திய அரசும் அங்கீகரித்தது.
இப்போது, "ஊழல் வழக்குகளை மட்டுமே விசாரிக்க, பீகார் சிறப்பு நீதிமன்றச் சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 பிப்ரவரி 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக