09 பிப்ரவரி 2010
"மும்பை , எல்லா இந்தியர்களுக்கும் தான் சொந்தம்; பாபா ராம்தேவ்
"மும்பை , எல்லா இந்தியர்களுக்கும் தான் சொந்தம்; இது போன்ற விஷயங்களில் சர்ச்சை கிளப்பாமல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற உருப்படியான விஷயங்களில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்ட வேண்டும்' என்று யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
"மும்பை மராட்டியருக்கே சொந்தம்' என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறி, பெரும் சர்ச்சையை கிளப்பி விட் டார். அவரது கருத்துக்கு எதிராக, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி தனது கருத்தைக் கூறினார். அவரைத் தொடர்ந்து இப்போது பாபா ராம்தேவ் தனது கருத்தை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பாபா, பின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா இந்தியர் அனைவருக்கும் சொந்தம். மொழி மற்றும் பிராந்திய அடிப்படையில் பிரிவினை உருவாக்கும் பேச்சுக்களை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும். நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் ஒருவரை ஒருவர் வெறுத்துச் சண்டையிடுவது துரதிர்ஷ்டவசமானது. இது மும்பையின் நலனுக்கு உகந்ததல்ல.இவ்வாறு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக