புதியவை :

Grab the widget  Tech Dreams

11 பிப்ரவரி 2010

முத்தாலிக் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூச்சு ! காதலர் தின ஸ்பெஷல் பரிசு


Pramod Muthalik got a taste of his own medicine when his face was blackened by the alleged activists of the Youth Congress.

காதலர் தினத்தை எதிர்த்து வரும் ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது.காதலர் தினத்திற்கு, ஸ்ரீராமசேனை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கன்னட "டிவி' சேனல் ஒன்று, காதலர் தினம் எதிர்ப்பு சம்பந்தமாக பெங்களூரு டவுன் ஹாலில் கலந்துரையாடலை நடத்தியது. இதில், ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் பங்கேற்றார்.முத்தாலிக்கின் வருகையை அறிந்த இளைஞர் காங்கிரசார், டவுன் ஹாலுக்கு கூட்டமாகச் சென்றனர். அங்கு முத்தாலிக்கை பிடித்து இழுத்து, அவரது முகத்தில் தார் மற்றும் கறுப்பு பெயின்டை பூசினர். இருந்தாலும், இளைஞர் காங்கிரசார் விடவில்லை. அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளினர்.

இச்சம்பவத்தையறிந்த போலீசார், டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். போலீசார் வருகையை அறிந்ததும் இளைஞர் காங்கிரசார் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்தி, தடியடி நடத்தினர்; சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக