புதியவை :

Grab the widget  Tech Dreams

04 பிப்ரவரி 2010

தொலைபேசி கேபிள்களை திருடும் போலீஸ் எஸ்.ஐ !திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, திருவல்லிக்கேணி போலீசார் இரு தினங்களுக்கு முன் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி கேபிள்களை மூவர் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரித்தபோது, மூவரும் தொலைபேசி கேபிள்களை திருடியது தெரிந்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முனியப்பன்(25) முருகன்(37) ராயபுரத்தைச் சேர்ந்த சக்தி(33) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இத்திருட்டு வழக்கில் அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய எஸ்.ஐ., சிட்டிபாபுவுக்கு(57) தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
திருட்டு வழக்கில் கூட்டாளிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அறிந்த சிட்டிபாபு, நேற்று முன்தினம் பணிக்கு வராமல் தலைமறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருட்டு வழக்கில் போலீஸ் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக