புதியவை :

Grab the widget  Tech Dreams

24 ஜூன் 2010

நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை.திருவள்ளூர்: பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்ற நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் தீர்ப்பளித்தது.


திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலய்ய நாயுடு(60). சாமியாரான இவர், 2007ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்று எதிர் வீட்டில் வசித்து வந்த ராமு மனைவி பார்வதி(50) என்ற பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். பார்வதி கொடுத்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து சாமியார் பாலய்ய நாயுடுவை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருவள்ளூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் அரிதாஸ் முன்னிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பாலய்ய நாயுடுவுக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 506/1ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பிரிவு 448ன் கீழ் ஆறு மாதம் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக