புதியவை :

Grab the widget  Tech Dreams

04 ஜூன் 2010

பெப்ஸி குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த தவளைகுளிர்பான பாட்டிலுக்குள் இரும்புத்துண்டு, கரப்பான் பூச்சி, பிளாஸ்டிக் துண்டு கிடந்து பார்த்திர்க்கிறோம். இப்போது ஒரு குளிர்பான பாட்டிலுக்குள் தவளை இறந்துகிந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (36). வக்கீல் குமஸ்தாவான இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., "பெப்சி' பாட்டில் வாங்கினார்.

அதிக, "கூலாக' இருந்ததால் கையில் வைத்து குலுக்கிய போது பாட்டிலினுள் ஏதோ கிடப்பது தெரிந்தது. "பெப்சி' பாட்டிலுக்கு பில் வாங்கிக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்குச் சென்று சோதனை செய்ததில் பாட்டிலினுள், தவளை இறந்து கிடப்பது தெரிந்தது.

மூடி சீல் வைக்கப்பட் குளிர்பான பாட்டிலில், தவளை இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1 கருத்து:

  1. ஒரு படத்தில் விவேக் காமெடி வரும் -- 'ஈ விழுந்த டீ, தவளை விழுந்தது, பல்லி விழுந்தது -- கேட்டால் இது clearance sale என்று கூறுவார்கள்'.

    பதிலளிநீக்கு