புதியவை :

Grab the widget  Tech Dreams

11 ஜூன் 2010

இயக்குனருக்கு , நடிகை முத்தம் ! ஒரு கோடி கேட்டு மிரட்டல்?கன்னட திரையுலகின் பிரபல நடிகை அமூல்யா 14 வயதிலேயே கதாநாயகியானவர். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கிய “பிரேமிசம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதே இயக்குனர் “நெனபிரலி” என்ற படத்தையும் டைரக்டு செய்துள்ளார்.

பிரேமிசம் படத்தில் நடித்த போது அமூல்யாவுக்கும், ரத்னஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமூல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமூல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். அதோடு ரத்னஜாவும் அமூல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோபடமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

மிரட்டலுக்கு ரத்னஜா பணியவில்லை. ரூ.1 கோடி கொடுக்கவும் மறுத்து விட்டார். இதையடுத்து முத்தக்காட்சி புகைப்படத்தை அந்த ஆசாமி வெளியிட்டு விட்டார்.

இது பற்றி ரத்னஜாகூறும் போது முத்தக்காட்சி புகைப்படம் உண்மையானது அல்ல. போலி படம். மார்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர் என்றார்.

இந்த புகைப்படம் குறித்து அமூல்யா கூறியதாவது:-

இயக்குனர் ரத்னஜாவையும், என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ வேண்டும் என்றே இப்படி ஒரு சதியை செய்துள்ளனர். எனது புகழை கண்டு பொறுக்க முடியாத அந்த நபர் நிச்சயம் எனது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அல்ல. சினிமா துறையை சேர்ந்த யாரோ தான் இப்படி ஒரு கீழ்த்தரமான படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படம் தயாரிக்கப்பட்டு இருப்பது அந்த படத்தை உன்னிப்பாக கவனித்தாலே நன்கு தெரியும். அந்த படத்தில் உள்ள பெண்ணின் தலை முடியில் உள்ள ரப்பர் வளையம் வித்தியாசமானது. அது போன்ற ரப்பர் வளையத்தை நான் பயன்படுத்துவது கிடையாது. மொத்தத்தில் அந்த படத்தில் சினிமா இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது புகழை கெடுக்க, வேண்டுமென்றே நடந்துள்ள இந்த சதி திட்டத்தை சட்டரீதியாக சந்திப்பேன்.

இவ்வாறு நடிகை அமூல்யா கூறினார். பேட்டியின் போது அவரால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கண்ணீர் வழிந்தோட குரல் கம்மிய நிலையில் பேசினார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக