புதியவை :

Grab the widget  Tech Dreams

17 ஜூன் 2010

ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைதுசெங்கல்பட்டு : கூடுவாஞ்சேரியில் ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன் . இவர் கூடுவாஞ்சேரியில் 2000 சதுர அடியளவில் நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்துக்கு உள்பிரிவு பெற்று ‌பட்டா மாற்றம் செய்ய செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


இந்நிலையில் சர்வேயர் உமாபதி பட்டா மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து மோகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் யூனிட் 5 , டி.எஸ்.பி., சரஸ்வதி தலைமையிலான போலீசார், மோகனிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். அவற்றை மோகன், உமாபதியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் உமாபதியை கையும் களவுமாக கைது செய்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக