புதியவை :

Grab the widget  Tech Dreams

11 ஜூன் 2010

75 வயது முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்ஜெய்ப்பூர் : 75வயது முதியவரை கயிறால் கட்டி, மரத்தில் தொங்கவிட்டு கொடுமைப்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள சாய்பா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் 3 போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஜெய்தேவ் என்ற 75 வயது முதியவரை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள மரத்தில் கட்டி தொங்க விட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக டோல்பூர் எஸ்.பி., சுரேந்திர குமார் உத்தரவின் பேரில், போலீசார் ராஜேந்திர காவியா, சமன்லால் மற்றும் கஜேந்திரா ஆகிய மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக