புதியவை :

Grab the widget  Tech Dreams

27 ஜூன் 2010

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : நில அளவை ஊழியர் கைது

காரைக்குடி : காரைக்குடியில் பட்டா மாறுதலுக்காக, டாக்டர் மனைவியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நில அளவை உதவியாளர் ஆறுமுகம் (49) கைது செய்யப்பட்டார்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயராஜ். இவரது மனைவி ராதா (45). கடந்த பிப்., 28 ல், விஜயராஜ் இறந்து விட்டார். அவரது பூர்வீக சொத்தான இரண்டு ஏக்கர் இடத்தை, மனைவி பெயருக்கு மாற்றி வைத்திருந்தார். அவரது இறப்புக்கு பின், தனது பெயருக்கு பட்டா மாறுதல் கோரி,ராதா திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில், மனு செய்தார். ஆறு மாதமாகியும் வருவாய் துறையினர் பட்டா மாற்றி தரவில்லை.


ஜூன் 16ல், நில அளவை உதவியாளரை சந்தித்து ராதா முறையிட்டார். "பட்டா மாறுதலுக்கு முதல் தவணையாக 1,500ம், பட்டா மாற்றியவுடன் 3,500ம் தர வேண்டும்,' என, நில அளவை உதவியாளர் கூறினார்.


இதுகுறித்து, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், ராதா புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி,நேற்று காலை 8.30 மணிக்கு, காரைக்குடி பெரியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று, 1,500 ரூபாயை, ராதா கொடுத்தார். இதை கண்காணித்த டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், மற்றும் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக