புதியவை :

Grab the widget  Tech Dreams

12 மே 2010

லஞ்சம் வாங்கியவருவாய் ஆய்வாளர் கைது




கள்ளக்குறிச்சி : முதியோர் உதவித் தொகை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டம்மாபேட்டையைச் சேர்ந்தவர் எல்லப்பன். முதியோர் உதவித் தொகை கேட்டு, வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனு கடந்த வாரம் கச்சிராயபாளையம் வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் விசாரணைக்காக வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட ராஜசேகர், 500 ரூபாய் லஞ்சமாக எல்லப்பனிடம் கேட்டார்.

இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் எல்லப்பன் புகார் செய்தார். நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் மறைந்திருந்து, எல்லப்பனிடம் பவுடர் தடவிய 500 ரூபாயை கொடுத்து அனுப்பினர். வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் அந்த பணத்தை எல்லப்பன் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரனை கைது செய்தனர்.

1 கருத்து:

  1. எல்லாம் சரிதாங்க,இதுபோல் லஞ்சம் வாங்குபவர்களை காட்டிக்கொடுக்கும் பொதுமக்களின் கதி அதன் பிறகு என்ன ஆகிறது?கைது செய்யப்பட்ட அதிகாரிகள் காட்டிக்கொடுத்தவரை சும்மாவிட்டுவிடுவாரா?இதுபோல் காட்டிக்கொடுத்தவர்களின் தற்போதய நிலையை ஏன் யாரும் எழுதவில்லை?

    பதிலளிநீக்கு