புதியவை :

Grab the widget  Tech Dreams

01 ஜனவரி 2010

காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது


காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் சிவகாஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிவ சிவா' என்ற படம் தயாராகிறது.

கதையின் நாயகனாக, குமரன் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுஹானி நடிக்கிறார். மகாநதி சங்கர், லட்சுமி பிரபா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, சிவாஷ் டைரக்டு செய்கிறார். மாறன், இசையமைக்கிறார். டி.புண்ணியமூர்த்தி தயாரிக்கிறார்.

சென்னையில் நடந்த 9 கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் செய்த கொடூர கொலைகள் ஆகிய உண்மை சம்பவங்கள் படமானது போல், கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள தேவநாதனின் கதையும் படமாகிறது.

இதுபற்றி சிவ சிவா' படத்தின் டைரக்டர் சிவாஷிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:

கோவில் அர்ச்சகர் தேவநாதனின் வாழ்க்கை வேறு. நாங்கள் படமாக்குகிற கதை வேறு. உலகமே தனது அம்மாதான் என்று ஒழுக்கமாக வாழ்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை, ஒரு இளம் பெண்ணின் வருகையால் எப்படியெல்லாம் மாறி, எவ்வளவு பெரிய குற்றவாளி ஆகிறான்? என்பதே இந்த படத்தின் கதை.

கதாநாயகனின் கதாபாத்திரம், கோவில் அர்ச்சகர் என்பது உண்மைதான் என்கிறார் டைரக்டர் சிவாஷ்.

அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாவதை முன்கூட்டியே கூறிவிட்டால், தணிக்கையின்போது பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், சிலர் வழக்குகள் தொடரக்கூடும் என்பதாலும், சிவ சிவா' படம் ரகசியமாக படமாகி வருவதாக கூறப்படுகிறது.1 கருத்து:

  1. என்ன கொடுமை இது எதனையோ நல்லவர்கள் கதை இந்த தமிழ் வரலாற்றில் இருக்க இது போன்று ஊரை ஏமாற்றமும் கயவனிகள் கதை மட்டும் உடனே சினிமா வாக வருகிறது இதை பார்த்து யாரும் திருந்துவார்கள் என்றால் குறைவே

    பதிலளிநீக்கு