புதியவை :

Grab the widget  Tech Dreams

08 ஜனவரி 2010

ரூ.500 லஞ்சம் வாங்கிய பேரம்பாக்கம் சார் பதிவாளர் தாரணி கைது.திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூர் அருகே பொது அதிகாரப் பத்திரம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், அலுவலக உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த போரூர் ராமாபுரத்தைச் சேர்ந்த கிறுஸ்டியின் மகள் ஆனந்தி (22). இவருடைய உறவினர் ராணி பேரம்பாக்கத்தை அடுத்த அழிஞ்சிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்க ராணி 30.12.09-ல் ஆனந்தி பெயருக்கு பொது அதிகாரப் பத்திரம் வழங்கினார்.

பத்திரம் பேரம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொது அதிகாரப் பத்திரம் வாங்க ஆனந்தி வியாழக்கிழமை பேரம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பத்திரம் கேட்டபோது சார் பதிவாளர் தாரணி ரூ.500 கொடுத்தால் தான் பத்திரம் தருவேன் என கூறியுள்ளார். இதை கேட்ட ஆனந்தி நாளை தருவதாக கூறி வந்து விட்டார்.

ஆனந்தி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விஜயராகவனிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர்களின் ஆலோசனைப் படி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரசாயண பவுடர் தடவிய 100 ரூபாய் நோட்டுக்கள் 5-ஐ ஆனந்தி, சார் பதிவாளர் தாரணியிடம் கொடுத்தார்.

வாங்கிய தாரணி, அலுவலக உதவியாளர் தேவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்து நின்றிருந்த டிஎஸ்பி விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், கலைச்செல்வன், சரவணன் ஆகியோர் சென்று தாரணி, தேவன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக