புதியவை :

Grab the widget  Tech Dreams

14 ஜனவரி 2010

வீட்டு மனை பட்டா வழங்க லஞ்சம் முன்னாள் சர்வேயர் பிடிபட்டார்


சென்னை : வீட்டு மனை பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய முன்னாள் சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யப்பட்டார்.அம்பத்தூர் அடுத்த பாடியை சேர்ந்தவர் ஜான்கிறிஸ்டோபர் (36). இவர், தனது மனைவி ஷீபா பெயரில் புதிய வீடு வாங்கினார். அதற்கு பட்டா கேட்டு அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.


இந்நிலையில், சர்வேயர் அருணாசலம் அனுப்பியதாகக் கூறி ஜான் கிறிஸ்டோபரை முன்னாள் சர்வேயர் கிருஷ்ணன் (60) சந்தித்தார். ரூ.6 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டாவுக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் கிறிஸ்டோபர், இதுகுறித்து , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்படி, லஞ்சம் கொடுப்பதற்காக அருணாச்சலத்தை ஜான்கிறிஸ் டோபர் சந்தித்தார், அவரோ பணத்தை வாங்காமல், அதனை கிருஷ்ணனிடம் கொடுக்குமாறு கூறினார். கிருஷ்ணன் பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தகவல் தெரியவந்ததும் அருணாச்சலம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக