புதியவை :

Grab the widget  Tech Dreams

11 ஜனவரி 2010

லஞ்சம் : காளையார்கோவில் மின்வாரிய பொறியாளர் கைது


காளையார்கோவிலில் துண்டித்த வீட்டு மின் இணைப்பிற்கு மறு இணைப்பு தர ,1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் அந்தோணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வலையம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம்(43). நூற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர், தனது புது வீடு மின் இணைப்பிற்கு மறவமங்கலம் மின்வாரியத்தில் விண்ணப்பித்து 1600 ரூபாய் முன்பணம் செலுத்தினார். காலதாமதம் ஆனது.இதனால், வீட்டு வேலைக்காக அருகில் குடியிருந்த சேசு என்பவர் வீட்டில் இருந்து ,மின்சாரத்தை பயன்படுத்தினார். தகவல் அறிந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர், சேசு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தார்.
தன்னால், இணைப்பு துண்டித்ததை அறிந்த ஆரோக்கியம், பொறியாளரை சந்தித்தார்.அப்போது பொறியாளர்,"" திருட்டு மின்சாரம் எடுத்ததற்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கலாம். அபதாரம் விதிக்காமல், மறுஇணைப்பு தர 4500 ரூபாய் தருமாறு'' கேட்டார். இதற்கு சம்மதித்த ஆரோக்கியம், முதற்கட்டமாக 2000 ரூபாய் கொடுத்தார். மீதம் பணத்தை தருவதற்கு முன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் ஆலோசனைபடி, பணத்தை பொறியாளரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த கூடுதல் எஸ்.பி., குமாரசாமி, இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீசார் மைக்கேல், மகேந்திரன், முருகன் ஆகியோர் பொறியாளர் அந்தோணியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக