புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஜனவரி 2010

இந்தியாவில் ஆண்டுக்கு புழங்கும் லஞ்சத் தொகை 21 ஆயிரம் கோடி ! - அடங்கப்பா !


இந்தியாவில், ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சப் பணம் புழங்குவதாக உலக வங்கி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்து என்று சென்னை லயோலா வணிக நிர்வாக நிறுவன இயக்குனர் கிறிஸ்டி தெரிவித்துள்ளார். மதுரை பாத்திமா கல்லூரி மேலாண்மைத் துறையில் மேலாண்மை கல்வியில் ஏற்படுத்த வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சென்னை லயோலா வணிக நிர்வாக நிறுவன இயக்குனர் கிறிஸ்டி கலந்து கொண்டு பேசியதாவது

இந்தியாவில் 2000 மேலாண்மை பள்ளிகள் உள்ளன. அதில் 25 நிறுவனங்கள் தான், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைத் முறையாக தருகின்றன. மீதி 50 சதவீத மாணவர்கள், என்ன படித்தோம் என தெரியாமலே வெளியேறும் சூழ்நிலை நிலவி வருகின்றது.

ஆளுமைத்தன்மை, தொடர்பாற்றல்,தொழில்நுட்பத்தி
றனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் , தொழிற்துறையில் நாளுக்கு நாள் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்களை கற்க வேண்டும். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதுடன், கொள்கை, மதிப்பு, நடத்தையுள்ளவராக விளங்கவேண்டும் என 21ம் நூற்றாண்டு கல்வி குறித்து யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நெறிமுறைகள், கொள்கைகளை மீறி, நிறுவனங்கள் லாபத்தை நோக்கியே செயல்படுகின்றன.

குறிப்பாக வர்த்தக உலகில், லஞ்சம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.அதன் படி இந்தியாவில் 21 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது.

மேலாண்மைப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடத்திட்டங்கள், அமெரிக்க கலாச்சாரம், வணிகத்தை பின்பற்றியுள்ளது. தொழிற்துறையில் இந்த அணுகுமுறை நீண்டநாட்களுக்கு தாக்குபிடிக்காது.

இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, கருத்துக்கள், செயல்பாடுகள் அடங்கிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக