புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜனவரி 2010

லஞ்சம்:​ ஈஎஸ்ஐ ஆய்வாளர் உள்பட இருவர் கைது


திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் ரூ.5,000 லஞ்சம் ​வாங்கியதாக திருப்பூர் தொழிலாளர் ஈட்டுறுதி கழக ​(ஈஎஸ்ஐ)​ ஆய்வாளர் உள்பட இருவரை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு ​(சிபிஐ)​ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல்,​​ கோவிந்தராஜ்,​​ சம்பத் ஆகியோர் சேர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழவஞ்சிபாளையத்தில் பனியன் ஜாப்ஒர்க் நிறுவனத்தை ஆரம்பத்தினர்.​ கடந்த மாதம் அந்நிறுவனத்தில் ​ தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக திருப்பூர் ஆய்வாளர் ஹர்பல்சிங்(43) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.​ ​அப்போது, ​​ தொழிலாளர்கள் சம்பந்தமான ஆவணங்களை முறைப்படி பராமரிக்காமல் இருந்தது குறித்து நிறுவன உரிமையாளர்களிடம் விசாரித்த அவர் இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.​

ஆனால்,​​ நிறுவன உரிமையாளர்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததை அடுத்து அவர்களுக்குள் கடந்த ஒருமாதமாக பேரம் நடந்துள்ளது.​ இறுதியில் ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டதை அடுத்து நிறுவன ​உரிமையாளர் கதிர்வேல் இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்புலான்வு பிரிவினருக்கு ​(சிபிஐ)​ தகவல் தெரிவித்தார்.​

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் வகுத்துக்கொடுத்த திட்டப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்துடன் கதிர்வேல் ​வியாழக்கிழமை கொங்கு மெயின் ரோட்டிலுள்ள ஈஎஸ்ஐ அலுவலகத்துக்குச் சென்றார்.ஆனால்,​​ ஹர்பல்சிங் அங்கு இல்லாததை அடுத்து செல்போனில் தொடர்பு கொண்டபோது தாராபுரம் சாலை புதூர் பிரிவிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆய்வுக்கு வந்துள்ளதாகவும்,​​ அங்கு வந்து பணத்தை கொடுக்கும்படியும் அவர் தெரிவித்தாராம்.​ ​இதையடுத்து,​​ அங்கு சென்ற கதிர்வேல் மற்றும் பங்குதாரர்களும்,​​ ஹர்பல்சிங் ​தெரிவித்தபடி அவரது உதவியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் அப்பணத்தை அளித்துள்ளனர்.

அப்போது வெளியில் மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் விரைந்து உள்ளே சென்று ஹர்பல்சிங் மற்றும் அவரது உதவியாளர் ராமச்சந்திரபிரபுவையும் பிடித்தனர்.​ நீண்ட விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஈஎஸ்ஐ அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக