புதியவை :

Grab the widget  Tech Dreams

06 நவம்பர் 2009

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஊழல் வழக்கில் , முதல் கைது .




ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீது ரூ.4000 கோடி ஊழல் வழக்கில்
மதுகோடாவின் உதவியாளர் விகாஷ் சின்ஹா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட முதல் நபர் விகாஷ் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் இவரும் ஒருவர். கைது செய்யப்பட்ட விகாஸ் சின்கா சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

55 போலீஸ் அதிகாரிகள் மீது திருட்டு கேஸ்! இறந்த இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப் பதிவு !


எஸ்.பி., கண்ணன்



கோவை மாவட்டத்திலுள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் பராமரிக்கப்பட்டு வந்த 490 வழக்குகளின் "கேஸ் டைரிகள்' காணாமல் போயின. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் 55 பேர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையால் அரண்டு போயுள்ளனர் போலீசார். கோவை மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேட்டுப்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை சப் - டிவிஷன்களில் 29 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தினமும் குறைந்தது மூன்று வழக்குகள் வீதம் பதிவாகின்றன. அடிதடி, சிறு திருட்டு உள்ளிட்ட சாதாரண வழக்குகளில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, வழக்குகள் கோர்ட் விசாரணைக்கு போகின்றன. ஆனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட பெரிய அளவிலான குற்ற வழக்குகள் போலீஸ் விசாரணை நிலையிலேயே தேங்கி விடுகின்றன. இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டாலும், கோர்ட் டில் தகுந்த ஆவணங்களை போலீசார் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது. குற்றவாளிகள் பிடிபடாதது, ஆவணங்கள் இல்லாதது, மேல் முறையீடு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்து விட்டது. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்.பி., அலுவலகம் பலமுறை உத்தரவிட்டும், ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் அலட் சியம் காட்டினர். இதையடுத்து, வழக்குகள் ஆய்வுக் கூட்டம், எஸ். பி., கண்ணன் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க் கள் கூறுகையில், "வேறு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பராகிச் சென்ற இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், தாங்கள் முன்பு பதிவு செய்த எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட "கேஸ் டைரி' (வழக்கு நாட்குறிப்பு) ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டனர். இதனால், வழக்குகளை விரைந்து முடிக்க இயலவில்லை' என்றனர். இதையடுத்து, ஸ்டேஷன் வாரியாக நிலுவையிலுள்ள வழக்குகளில், எத்தனை வழக்குகளுக்கு "கேஸ் டைரி' ஆவணம் உள் ளது' என, கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில், 800 வழக்குகளின் "கேஸ் டைரி' மாயமாகியிருந்தது. எஸ்.பி., எச்சரித்ததை தொடர்ந்து 310 "கேஸ் டைரி'களை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்; எனினும், 490 ஆவணங்கள் இன் னும் வந்து சேரவில்லை.இதனால், மாயமான "கேஸ் டைரி'களை ஒப்படைக்காத போலீஸ் அதிகாரிகள் மீது எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய, எஸ்.பி., கண்ணன் அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், பேரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் ஒரே நாளில் 15 இன்ஸ்பெக்டர், 40 எஸ்.ஐ.,க் கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 380 (திருட்டு) பிரிவின் கீழ், அந்தந்த ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நடவடிக்கை போலீசார் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி., கண்ணன் கூறியதாவது:நிலுவையிலுள்ள வழக்குகள் சம்மந்தமான "கேஸ் டைரி'களை அதிகாரிகளில் சிலர் உடன் எடுத்துச்சென்றுவிட்டனர். இவற்றை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப் படைக்க பல முறை அறிவுறுத்தப்பட்டது. கோவையில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மட்டும் ஆவணங்களை ஒப்படைத்தனர். வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றுச்சென்ற அதிகாரிகள் ஆவணங்களை ஒப்படைக்க வில்லை. எனவே, அந்த அதிகாரிகள் மீது 490 வழக்குகள் (ஒவ்வொரு கேஸ் டைரிக்கும் தனித்தனி வழக்கு) பதிவு செய்துள்ளோம்.இவ்வாறு, எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.

இறந்த இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப் பதிவு: இரு ஆண்டுகளுக்கு முன் கருமத்தம்பட்டி போலீசில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சாலை விபத்தில் இறந்தார். இவர் வசமிருந்த "கேஸ் டைரி'களும், இன்னும் அந்த ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படவில்லை. இதை தொடர்ந்து மீதும் வழக்குப் பதிவு செய் யப்பட்டது.


இதே போன்று, புறநகரில் முன்பு இன்ஸ் பெக்டராக பணியாற்றி, டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்ற அசோக்குமார் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், முன்பு கோவில்பாளையம் போலீசில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தனபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், கைதாகி சிறை சென்றவர்.




05 நவம்பர் 2009

பட்டா வழங்குவதற்கு அலைக்கழிப்பு : சேலம் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றும் குழந்தைவேலுவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்



பட்டா வழங்குவதற்கு அலைக்கழிப்பு செய்ததற்காக தற்போது சேலம் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றும் குழந்தைவேலுவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த காடூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (71). இவர் கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அலமேலு என்பவரிடமிருந்து 17 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலத்திற்கு
பட்டா வழங்கும்படி,அப்போதைய குன்னம் தாசில்தார் குழந்தை வேலுவிடம் மனு வழங்கியுள்ளார். ஆனால் ராமலிங்கத்திற்கு பட்டா வழங்காமல் குழந்தை வேலு தொடர்ந்து இழுத்தடித்துள்ளார்.

இதையடுத்து
21.6.2005ம் அன்று இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு ராமலிங்கம் மனு செய்தார். மனுவை ஆராய்ந்த முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், ராமலிங்கத்திற்கு பட்டா வழங்க ஆவண செய்யும்படி பெரம்பலூர் ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 27.8.2005 அன்று, ராமலிங்கத்திற்கு பட்டா வழங்கும்படி பெரம்பலூர் ஆர்.டி.ஓ., அப்போதைய குன்னம் தாசில்தார் குழந்தைவேலுவுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவையும் அலட்சியப்படுத்தினார் குழந்தைவேலு.


இதையடுத்து
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்படி பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்த குழந்தை வேலுவுக்கு, சேவைக்குறைபாடு மற்றும் அலைக்கழிப்பு ஆகிய செயலுக்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், 3 மாதத்தில் ராமலிங்கத்துக்கு பட்டா வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. குழந்தைவேலு தற்போது சேலம் ஆர்.டி.ஓ.,வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சாமி சைக்கிளில் ! பூசாரி புல்லட்டில் !


மதுகோடாவின் தந்தை ஓலை குடிசையில் ! மகனோ இன்று நாடு முழுவதும் வாங்கிய பங்களாக்களில் !


கோடி கோடியாய் சம்பாதித்த மதுகோடாவுக்கு இன்று நாடு முழுவதும் பங்களாக்களும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் மதுகோடாவின் தந்தை இன்னும் ஓலை குடிசையில்தான் வசிக்கிறார்.
மதுகோடா பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். தந்தை பெயர் ராசிகா கோடா, தாயார் கூனி கயூ, சிங்பூப் மாவட்டத்தில் உள்ள குவா கிராமம்தான் மது கோடாவின் சொந்த ஊர்.ஓலை குடிசையில்தான் மதுகோடா பிறந்தார். அந்த வீடு இன்னும் உள்ளது. அதில் தந்தை வசித்து வருகிறார். 6.7.1971-ல் பிறந்த மது கோடா பள்ளிப்படிப்பை முடித்தார்.
அப்போதே அரசியலில் ஈடுபாடு வந்தது. ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். அப்போது ஜன்னல்களுக்கு கிரில் செய்யும் வெல்டிங் தொழிலாளியாகவும் இருந்து வந்தார்.2000-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவருக்கு பாரதீய ஜனதாவில் டிக்கெட் கிடைத்தது. ஜகநாத்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாபுலால் மராட்டி தலைமையிலான பாரதீய ஜனதா அரசில் மந்திரி பதவியும் கிடைத்தது.
இதுதான் அவருக்கு வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. மந்திரி பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் தவறவில்லை.
2005 சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை. சுயேச்சையாக நின்று மதுகோடா வெற்றி பெற்றார். அப்போதும் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. சுயேச்சையாக இருந்த மதுகோடா ஆதரவு அளிக்க முன் வந்தார். அவருக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைத்தது.
இடையில் பாரதீய ஜனதா அரசை கவிழ்த்து விட்டு வெளியே வந்தார். அவரே முதல்- மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2006-ல் முதல்- மந்திரி ஆனார். அவருக்கு காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஆதரவு அளித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் ஆட்சியை இழந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியலில் இருந்த இந்த கால கட்டத்தில்தான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்.
இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மதுகோடா அரசியலில் இருந்த காலத்தில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் படித்து பட்டமும் பெற்றுள்ளார்.


சி.பி.ஐ. லஞ்ச வேட்டை எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் சிக்கும் அரசு அதிகாரிகள்

சென்னை, நவ. 5-
சி.பி.ஐ. அதிகாரிகளின் லஞ்ச வேட்டையில் இந்த ஆண்டு 65 அரசு அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இவர்களில் 14 பேர் எஸ்.எம்.எஸ். மூலம் வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்திசிக்கியவர்கள்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சொல்லலாம் என்று அறிவித்தபின்பு மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில்தான் புகார்கள் அதிகம் வரும். உள்புற பகுதிகளான உசிலம்பட்டிஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இருந்து கூட எஸ்.எம்.எஸ். புகார்கள் வருகிறது. அதன் அடிப்படையில்லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் சிக்கி உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 600 நிறுவனங்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்டஅதிகாரிகளை கண்காணித்து வருகிறோம். இதில் 25 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களும், 5 இன்சூரன்ஸ் நிறு வனங்களும் பொது துறை நிறுவனங்களும் அடங்கும்.

இந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு சில அலுவலர்களே சி.பி.ஐ.க்கு தகவல் தரும் நபர்களாக உள்ளனர். ரகசிய கண்காணிப்பில் உள்ள அதிகாரிகளை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறோம். இதன்காரணமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும். எஸ். எம்.எஸ். தகவல்கள் லஞ்ச அதிகாரிகளைபிடிப்பதற்கு பெரும் துணையாக உள்ளது என்று சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய விவரத்தை
28255899 என்ற தொலைபேசி எண்ணிலோ 94440 49224 என்ற செல்போன் எண்ணில் எஸ்.எம்.எஸ். மூலமாகவோ பொதுமக்கள் புகார்தெரிவிக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



04 நவம்பர் 2009

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் ! வித்தியாசமான அரசு மருத்துவமனை


வத்திராயிருப்பு: சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட ஊழியர் மீது
நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.

பிஎஸ்என்எல்-லில் ஊழலா? புகார் பண்ணுங்க !


தஞ்சாவூர், நவ. 3: பிஎஸ்என்எல்-லில் லஞ்சம், ஊழல் இருப்பின், அதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரி ஜான் ஸ்டீபன் தாசிடம் 94431-00612 என்ற செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தஞ்சாவூர் கோட்டப் பொதுமேலாளர் ஜே.வி. ராஜாரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் பிஎஸ்என்எல்-லில் நவம்பர் 7-ம் தேதி வரை கண்காணிப்பு, விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் புகார் மட்டுமன்றி, தொலைபேசி தொடர்பான தகவல்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரி டி.எஸ். ரவிச்சந்திரனை 94861 03212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், இதுதொடர்பாக தஞ்சாவூர் ராம்நகரிலுள்ள பொதுமேலாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் முறையிடலாம்.

03 நவம்பர் 2009

பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் !


லஞ்சம், வன்முறை மற்றும் சாதி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக இயக்கத்தினர் தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
அந்த இயக்கத்தின் சார்பில் இன்று புதுவை புதிய பஸ் நிலையம் அருகே இயக்க தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி மற்றும் இயக்க நிர்வாகிகள் அனில்சந்திரசேகரன், பிரபு, சுபாஷ், சண்முகம், குமரன் ஆகியோர் தங்களுடைய இயக்க கோரிக்கைகயை வலியுறுத்தி பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அனுமதி பெற்று இந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று அவர்களிடம் கூறினர். இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து சத்தியாகிரக பிரச்சார இயக்கத்தினரை ஜீப்பில் ஏற்றி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
தங்களுடைய பிரச்சாரம் குறித்து ராமகிருஷ்ண சாஸ்திரி போலீஸ் சூப்பிரண்டிடம் விளக்க மளித்தார். அதையடுத்து பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைத்தது. அதன் பிறகு புதுவை கடற்கரை சாலையில் பொதுமக்கள் காலில் விழுந்து சத்தியாகிரக இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.


ஊழல் புகாருக்கு உள்ளான மதுகோடா மருத்துவமனையில் அனுமதி


ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய ரெய்டில், சட்ட விரோதமாக ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மது கோடா ஒத்துழைக்க மறுக்கிறார் என வருமான வரித்துறை இயக்குனர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சட்டவிரோதமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் மதுகோடா மற்றும் அவரது நண்பர்களுக்கு டெல்லி, கொல்கத்தா, மும்பை, லக்னோ, நாசிக், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் சொந்தமாக உள்ள 70 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதில், மூட்டை, மூட்டையாக ஆவணங்களை கைப்பற்றினர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் அளவுக்கு மதுகோடா முதலீடு செய்து இருப்பதும் தெரிந்தது. ஹவாலா பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.560 கோடி அனுப்பியுள்ளனர். இதையடுத்து மதுகோடா மற்றும் அவரது பினாமிகளான சஞ்சய் சவுத்ரி, பினோத் சின்கா ஆகியோருக்கு சொந்தமான இடங்களுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மது கோடாவுக்கு சொந்தமாக மும்பையில் ஓட்டல்களும் மூன்று கம்பெனிகளும் உள்ளது. தாய்லாந்திலும் ஒரு ஓட்டல் உள்ளது. லைபீரியாவில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. மது கோடா மற்றும் அவரது பினாமிகளின் சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரித்துறை இயக்குநர் அஸ்வின் குமார் கூறுகையில், விசாரணைக்கு மதுகோடா ஒத்துழைக்கவில்லை. அவரது நண்பர்கள் 6 பேர், 6ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் மதுகோடா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

02 நவம்பர் 2009

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பா.ஜ., வை தி.மு.க. எதிர்க்காதது ஏன்? ஜெயலலிதா கேள்வி !


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்காதது ஏன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தனது ஆட்சிக்காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் இந்த தேசத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் ராசா கூறியிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசிலும் ராசா அமைச்சராக இருந்த தோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களிலும் ராசாவுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். அதே சமயத்தில், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது என்பதும் வழக்கறிஞரான ராசாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற அற்ப காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீதான ராசாவின் புதிய குற்றச்சாட்டு, பல உண்மைகளை, ரகசியங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்த போது, இதர தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை? குறைந்த பட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை? ஏன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற வில்லை? இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாவிட்டால், பரவலான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படாவிட்டால், தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா? போன்ற பல கேள்விகளுக்கும் வழி வகுத்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுவதும் சட்ட விரோதமான மோசடி.; இந்த தீய நோக்கத்தை உணர்ந்து கொண்டு அவர்களை தூக்கி எறிந்தால் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


லஞ்சம் வாங்கிய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி கைது .லஞ்சத்தை கொடுத்துவிட்டு ரேஷன் கார்டை வாங்கிப் போ !


சென்னை : குடும்பத் தகராறில் சமாதானம் செய்து வைத்த மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., கணவன் மீது எப்.ஐ.ஆர்., போடாமல் இருக்க, லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்


சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 39வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ்(52). இவரது மனைவி வெரோனியாவுக்கும், இவருக்கும் இடையே கடந்த 28ம் தேதி இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது கணவர் தன்னை அடிப்பதாக வெரோனியா, 30ம் தேதி எம்.கே.பி., நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, 31ம் தேதி ஜோசப் ராஜை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.ஜோசப் ராஜ், வெரோனியா இருவரிடமும் விசாரணை நடத்திய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி, இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளார்.

போலீஸ் நிலையத்திலிருந்து ஜோசப் ராஜ் வெளியே செல்லும் போது, அவரை அழைத்த எஸ்.ஐ., குணவதி, "உன் மேல் எப்.ஐ.ஆர்., போடாமல் இருந்ததற்காக, 1,500 ரூபாய் தர வேண்டும்' என கூறியுள்ளார்.தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ஜோசப் ராஜ், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' என கூறியுள்ளார். உடனே எஸ்.ஐ., குணவதி ஜோசப் ராஜிடம், "நீ பணம் தராவிட்டால், எழுதிக் கொடுத்த கடிதத்தை கிழித்து போட்டு விட்டு, உன் மீது எப்.ஐ.ஆர்., போட்டு விடுவேன். உன் வீட்டு ரேஷன் கார்டை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விட்டு போ. 1,500 ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிப் போ' என கூறியுள்ளார்.ஜோசப் ராஜ் இதனை தன் மனைவியிடம் சொல்லியுள்ளார்.

மனைவி வீட்டிற்கு சென்று ரேஷன் கார்டை எடுத்து வந்து போலீசில் கொடுத்துள்ளார். இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு ஜோசப் ராஜ் விடுவிக்கப்பட்டார். அவரிடம் எஸ்.ஐ., குணவதி, "நாளை எனக்கு இரவுப் பணி. நாளை மறுநாள் திங்கள் கிழமை மதியம் 2 முதல் இரவு 9 மணிக்குள் வந்து பணத்தை கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு போ' என கூறினார்.உடனே ஜோசப் ராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை 5 மணிக்கு எம்.கே.பி., நகர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓட்டலில் ஜோசப் ராஜ், எஸ்.ஐ., குணவதிக்காக காத்திருந்தார். ஜோசப் ராஜை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, பணத்தை வாங்கிக் கொண்டு ரேஷன் கார்டை கொடுத்துள்ளார்.

அப்போது மறைவிடத்தில் நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சரஸ்வதி தலைமையிலான போலீசார், எஸ்.ஐ., குணவதியை கையும் களவுமாக கைது செய்தனர்.அவரிடமிருந்த 1,500 ரூபாய் பணம், ரேஷன் கார்டு, சி.எஸ்.ஆர்., ரெக்கார்டு புத்தகம் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.ஐ., குணவதியின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.

சொத்து விபரங்களை வெளியிட்டார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்



புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் 20 பேர் தங்கள் சொத்து கணக்கை, சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க தானாக முன்வந்து நீதிபதிகள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பி.என். அகர்வாலும் இந்த பட்டியலில் ஒருவர். நீதிபதி எச்.எஸ். பேடியின் பெயர் மட்டும் இந்த பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


The assets declared by Chief Justice K.G. Balakrishnan were around Rs.18 lakhs, including his two-bedroom flat in Ernakulam worth Rs.5.75 lakh, his vacant residential plot in Faridabad measuring 444.44 sq yard valued at 4.50 lakh, and his native house in Thrikkakara South village in Kerala.

The CJI also declared other landed properties in Kerala, worth Rs.3.5 lakh and Rs.4.33 lakh. He said his wife has gold jewellery weighing 20 sovereigns and an old Santro car of 2000. He said he has no investment in shares or fixed deposits.

The apex court's second senior most judge, Justice S.H. Kapadia, appeared to be richer than the CJI.

Justice Kapadia put the value of his declared assets at over Rs.48 lakh. The declared assets include flats, buildings, shares, mutual funds, fixed deposits, provident funds. He said he owned no vehicle.

The third senior most judge, Justice Tarun Chatterjee, declared cash worth around Rs.3 lakh, but he said that he has other properties like vehicles, gold jewellery of his wife and some ancestral property in Kolkata. Justice Chatterjee's vehicles include a Chevrolet Tavera and a Honda Seil.

The court's fourth senor most judge, Justice Altamas Kabir declared assets of around Rs.80 lakh, including ancestral property, besides LIC policies and saving accounts.

The fifth senior most judge, Justice R.V. Raveendran, gave a detailed account of his assets running into five pages with the exact number of his shares, debentures etc.

According to the declaration, he owns shares in about 60 companies, including Reliance Group firms belonging to both Mukesh and Anil Ambani. He is also hearing a case on gas supply disputes between the firms of the two Ambani brothers and the government.

The only sitting judge who could not declare his assets along with others was Justice H.S. Bedi.

ஸ்ரீ வைகுண்டம் தாலுக்கா ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர் .அப்போது கணக்கில் வராத ரூ .9100 கைப்பற்றப்பட்டது .

தூத்துகுடி மாவட்டம் ,ஸ்ரீ வைகுண்டம் தாலுக்கா அலுவலகத்தில் மாத இறுதியில் ரேஷன் கடை ஊழியர்கள் கணக்கை காட்டி பணம் செலுத்தி வருகின்றனர் . அவர்களிடம் கமிஷன் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .நேற்று மாலை நடந்த திடீர் சோதனையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 7600 ,கணினி அறையில் இருந்த ரூ 1500 பறிமுதல் செய்யப்பட்டது .

இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி சங்கரநாராயணன் ,குடிமை பொருள் வழங்கல் தனி ஆய்வாளர் சுல்தான் , மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர் .அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .

தினகரன் பதவி உயர்வு: இன்னும் முடிவெடுக்கவில்லை- தலைமை நீதிபதி


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்




புது
தில்லி, நவ. 1: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தும் விவகாரம் குறித்து இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் அகில இந்தியக் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தினகரன் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். தினகரன் தவிர்த்து, மற்ற 4 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவரை பதவி உயர்த்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, இல்லை, இல்லை. தினகரன் விவகாரத்தில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் கே.ஜி.பாலகிருஷ்ணன். கருத்து சொல்ல விரும்பவில்லை: மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் கூட்டத்தில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நாட்டின் பல்வேறு அரசமைப்புகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனினும், அவை குறித்து கருத்தேதும் சொல்ல விரும்பவில்லை என்றார். தினகரன் பதவி உயர்வு குறித்து கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இதுகுறித்து பதில் ஏதும் சொல்வதற்கில்லை என்றார் வீரப்ப மொய்லி. புகார் எதிரொலி: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.பட்நாயக், பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மேற்கு வங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜார், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழுவும் அனுமதி அளித்தது. இந்நிலையில் பி.டி. தினகரன் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து வாங்கிக் குவித்துள்ளதாகப் புகார் எழுப்பி, அவரை பதவி உயர்த்துவதற்கு எதிராக நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர். தினகரன் பணியாற்றும் கர்நாடகத்திலும் அவரை பதவி உயர்த்துவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பி.டி. தினகரனை பதவி உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


01 நவம்பர் 2009

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 1.60 லட்சம் கோடி ரூபாய் ஊழல்,ராசா முன் கூட்டியே வெளியிடாதது ஏன்? - பாஜக


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருந்த குற்றச்சாற்றுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.

மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக கூறும் அமைச்சர் ராசா, இதுவரை மவுனமாக இருந்தது ஏன்? என்றும், கடந்த 5 ஆண்டு காலமாக மத்திய அமைச்சராக இருந்தவர் முன் கூட்டியே இந்த குற்றச்சாற்றை வெளியிட்டிருக்கலாமே? என்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியிருக்கிறார்.

இப்போது ராசா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதால், பாஜக ஆட்சி மீது குறைகூறி வருவதாக ஜோஷி கூறினார்.

பாஜக ஆட்சியின் போது இலவசமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் அரசுக்கு 1.60 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ராசா நேற்று புகார் கூறியிருந்தார்.

மேலும் பல முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கூடுதலாக 4.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு அளித்ததாகவும் அமைச்சர் குற்றம்சாற்றியிருந்தார்.

முன்னதாக தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ராசாவை பாஜக வலியுறுத்தி வருகிறது.

ஆனால் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று ராசா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.