புதியவை :

Grab the widget  Tech Dreams

05 ஆகஸ்ட் 2010

கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஆணையம் கவனம் கொண்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின் இணைப்பு பெற முடிவு செய்யும்போது, மேம்பாட்டுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வாடகைதாரர் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்கள் சுமையைக் குறைக்கவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறி, வீட்டின் உரிமையாளர்கள் சிலர், வாடகைதாரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு இருந்தால், அதிக பட்சமாக யூனிட்டுக்கு 4.05 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். பயன்பாடு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால், அளவீட்டைப் பொருத்து ஒரு யூனிட்டுக்கு 2.20, 1.50 ரூபாயும், 80, 70 பைசா மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோத செயல். விதிமுறை மீறி கட்டணம் வசூலித்தால், 2003ம் ஆண்டு, மின்சாரத் சட்டம் 142, 146 பிரிவுகளின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கத்தக்க குற்றம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், கோர்ட்டில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக