புதியவை :

Grab the widget  Tech Dreams

10 ஆகஸ்ட் 2010

கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்

சேலம்: சேலத்தில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, எஸ்.பி.,யிடம் கண்ணீர் புகார் அளித்தார்.ஆத்தூர் இலந்தவாரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். அவர் நேற்று சேலம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.அதில், என் மகள் மகாலட்சுமி (17). அவரை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளி மகன் ராஜா ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று கற்பழித்தார். எனது மகள் கடத்தப்பட்டதை அறிந்த நான், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக மகாலட்சுமியை ஆகஸ்ட் 6ம் தேதி ராஜா வீட்டில் இருந்து மீட்டு வந்தேன். எனது மகள் கற்பழிக்கப்பட்டதை அறிந்த நானும், எனது உறவினர்களும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தலைவாசல் போலீஸில் புகார் அளிக்க சென்றேன். புகார் மனுவை பதிவு செய்யவும், விசாரிக்கவும் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி கேட்டனர்.


ராஜாவின் நண்பனான ஆதியின் உறவினர் தலைவாசல் போலீஸ் ஏட்டு என்பதால், அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏட்டுவும், இன்ஸ்பெக்டரும் தற்போது அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். என் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அவர்களை விட லஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று எங்களை வற்புறுத்துகின்றனர். எனது மகளை சீரழித்த ராஜா மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கும் இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக