புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2010

லஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூவர் "சஸ்பெண்ட்'

எழுமலை: மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கள்ளக்காதலியை தாக்கிய ஏட்டு, மது போதையில் சாலையில் உருண்டு கிடந்த ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன். வழக்கு ஒன்றில் சிலரை கைது செய்யாமல் இருக்க, லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். கோர்ட் உத்தரவுப்படி, எஸ்.ஐ., ரிமாண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பக்கபலமாக இருந்து லஞ்சம் வசூலித்து கொடுத்த ஏட்டு சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


மேலூர் ஏட்டு பாலசுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் பணியின் போது, பட்டப்பகலில் மது போதையில் சாலையில் உருண்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தனர். அவரை அப்புறப்படுத்திய போலீசார், ஏட்டு போதையில் இருந்தது குறித்து எஸ்.பி., மனோகருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

சாப்டூர் ஏட்டு ரவி. இவர், கள்ளக்காதலியை அடித்து, உதைத்தாக வரப்பட்ட புகார் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.ஐ., சீனிவாசன், ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக எஸ்.பி., மனோகர் விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரைப்படி, சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், பணிக்கு சரியாக வராத ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக