12 நவம்பர் 2009
லஞ்ச நடவடிக்கைகள் புற்றுநோயைப் போன்றவை. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
டில்லியில் யு.பி.எஸ்.சி., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஜனாதிபதி பிரதிபா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. லஞ்சம் என்பது புற்றுநோயைப் போன்றது. நாட்டின் வளர்ச்சிக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் கட்டமைப்பு வசதிகளையே சீர்குலைத்து விடும். லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
பொது வினியோக திட்டம் போன்றவற்றில் லஞ்சமும், ஊழலும் அதிகரித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். இத்திட்டம், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. வறுமையையும், பசியையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், ஊழல் நடந்தால், ஏழை மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாவர். இதுபோன்ற செயல்களால், நாட்டின் வளங்கள் குறையும். மற்ற நாடுகளை விட, வளர்ச்சியில் நாம் பின் தங்கி விடுவோம். இவ்வாறு பிரதிபா பேசினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக