புதியவை :

Grab the widget  Tech Dreams

21 நவம்பர் 2009

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டது


சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 54 நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


நீதிபதி எலிப் தர்மாராவ்: மனைவி பத்மா புஷ்பாஞ்சலிக்கு திருமணத்தின் போது, ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம், அனந்தவரம் கிராமத்தில் சீதனமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம். மனைவி பெயரில் 10 சவரன் நகை. கார் லோன் பாக்கி மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 331 ரூபாய். மாதம் 8,850 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது.

நீதிபதி டி.முருகேசன்: இரண்டரை சவரன் நகை, மனைவி பெயரில் 65 சவரன் நகை. மனைவி பெயரில் ஒன்பது லட்சத்து 95 ஆயிரத்து 82 ரூபாய் மதிப்பிலான லான்சர் டொயட்டா இன்னோவா கார் (பழைய வாகனத்தை விற்று, நான்கு லட்சம் ரூபாய் கடன் மூலம் வாங்கப்பட்டது) மனைவி பெயரில் விவசாயக் கடன் பாக்கி 2.68 லட்சம் ரூபாய். கார் லோன் பாக்கி 2.54 லட்சம் ரூபாய்.


நீதிபதி ரவிராஜ பாண்டியன்: கும்பகோணம் அருகே இரு கிராமங்களில் உள்ள நிலங்களை விற்பனை செய்தது உட்பட 77 லட்சத்து 16 ஆயிரத்து 840 ரூபாய் இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு. மோதிரம், சங்கிலி மற்றும் ருத்திராட்ச மாலை சேர்த்து 80 கிராம் நகை. மனைவி பெயரில் 300 கிராம் நகை. மகள் பெயரில் 300 கிராம் நகை. கனரா வங்கியில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரத்து 66 ரூபாய் சேமிப்பு.

நீதிபதி சொக்கலிங்கம்: சிவகங்கை மாவட்டத்தில் 12.4 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு. இந்தியன் வங்கி ஐகோர்ட் கிளையில் 25 ஆயிரம் ரூபாய் சேமிப்பு. 100 சவரன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி. மனைவி பெயரில் 175 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி. அரசிடம் இருந்து வீட்டுவசதிக் கடன் 7.5 லட்சம் ரூபாய். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

நீதிபதி நாகப்பன்: மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 754 ரூபாய் சேமிப்பு. வைப்பீடு ஒரு கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 763 ரூபாய். 10 சவரன் நகை. மனைவி நடத்தி வரும் வர்த்தகத்தில் முதலீடு, டிபாசிட் சேர்த்து இரண்டு கோடியே 88 லட்சத்து 84 ஆயிரத்து 16 ரூபாய். 100 சவரன் நகை; ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வைரம்.


நீதிபதி பானுமதி: கணவர் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலம் (மூதாதையர் சொத்து). 30 சவரன் நகை. கணவர் பெயரில் இரு சக்கர வாகனம். கடன் 2.5 லட்சம் ரூபாய்.



நீதிபதி மோகன்ராம்: தாய்க்கு சொந்தமான நகை 400 கிராம், திருமணத்தின் போது மனைவிக்கு 1,000 கிராம் தங்க, வைர நகைகள். 10 கிலோ வெள்ளி. 7.54 லட்சம் மதிப்பில் ஹோண்டா சிட்டி கார். மகள் பெயரில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹோண்டா மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஜோதிமணி: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வீடு, விவசாய நிலங்கள். திருமணத்தின் போது, மனைவிக்கு சீதனமாக 100 சவரன் நகை. ரூ.5.92 லட்சம் மதிப்பில் மாருதி கார்.


நீதிபதி ரகுபதி: தேனி மாவட்டத்தில் 51.76 ஏக்கர் விவசாய நிலம். திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முறையே 18 சென்ட், 19.3 சென்ட் பரப்பளவில் பண்ணை நிலங்கள். இந்தியன் வங்கியில் 8.62 லட்சம் ரூபாய் சேமிப்பு. மனைவி, மகள் பெயரில் 195 சவரன் தங்க நகைகள்; 10 கிலோ வெள்ளி. மகள் பெயரில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். ஹோண்டா சிட்டி கார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரர்களிடம் 28.5 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்: திருமணத்தின் போது பெறப்பட்ட, பின் வாங்கிய நகைகள் 200 சவரன்; 15 காரட் வைரம்; ஏழு கிலோ வெள்ளி. சிட்டி யூனியன் வங்கியில் 11.38 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி பாட்ஷா: இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கூட்டுறவு வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 2.98 லட்சம் ரூபாய் சேமிப்பு. 81.5 சவரன் தங்க நகை. ஒரு கிலோ வெள்ளி. 7.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண் டாய் அக்ஸன்ட் கார் (மாதத் தவணையில் வாங்கியது).

நீதிபதி ஜனார்த்தன ராஜா: ராஜபாளையத்தில் குடும்பச் சொத்து, விவசாய நிலம் 10 ஏக்கர். கடன் பாக்கி 8.9 லட்சம் ரூபாய். மந்தைவெளி கனரா வங்கி, ஐகோர்ட் இந்தியன் வங்கி கிளையில் 41.75 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. திருமணத்தின் போது சீதனமாக 75 சவரன் தங்க நகைகள்.


நீதிபதி பால்வசந்தகுமார்: கன்னியாகுமரி, சென்னையில் குடியிருப்பு வீடுகள். கன்னியாகுமரி மாவட்டம் வியனூர் கிராமத்தில் மனைவி பெயரில் விவசாய நிலங்கள். மனைவி, மகளுடன் சேர்த்து மொத்த வங்கி சேமிப்பு மற்றும் கையிருப்பு பணம் 7.45 லட்சம் ரூபாய். 80 சவரன் தங்க நகைகள். 4.96 லட்சம் ரூபாய் மதிப்பில் மாருதி ஸ்விப்ட் கார். 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் (மாதத் தவணை ரூ.11,600)


நீதிபதி சுகுணா: வங்கிகளில் சேமிப்பு 24.47 லட்சம் ரூபாய். 40 சவரன் தங்க நகை; 900 கிராம் வெள்ளி. 4.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண்டாய் கார்.


நீதிபதி ஜெய்சந்திரன்: சென்னை பெசன்ட் நகர், மடிப்பாக்கத்தில் வீடுகள், கரூர் மாவட்டத்தில் 55.27 ஏக்கர் விவசாய நிலம். ஐகோர்ட் இந்தியன் வங்கிக் கிளையில், 18 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. வைர மோதிரம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 1.25 லட்சம் ரூபாய் கடன், 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். 7.5 லட்சம் ரூபாய் அரசுக் கடன். மகன் விஷால் அபிந்த் கல்விக் கடன் 11.21 லட்சம் ரூபாய். கொடைக்கானலில் மனைவி பெயரில் 31.5 ஏக்கர் நிலம். 600 கிராம் தங்க நகைகள், நான்கு கிலோ வெள்ளி. ஆறு காரட் வைர நகைகள். இண்டிகா கார்.



நீதிபதி ராஜேஸ்வரன்: காஞ்சிபுரத்தில் வீடு. 15 சவரன் நகை, மனைவி பெயரில் 60 சவரன் நகை. இந்தியன் வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் (ரூ.2.87 லட்சம் செலுத்தப்பட்டது). மனைவி பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடன்.

நீதிபதி தனபாலன்: வீடு, இரண்டு ஏக்கர் விவசாய நிலம். மனைவி, குழந்தைகள் பெயரில் 11.75 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 21 சவரன் நகை, மனைவி, மகன் பெயரில் 56 சவரன் நகை. மகனுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வீட்டுக் கடன் பாக்கி 13.77 லட்சம் ரூபாய்.


நீதிபதி சுதாகர்: வேலூர் மாவட்டத்தில் வீடுகள், 2.87 எக்டேர் விவசாய நிலம்.


நீதிபதி தமிழ்வாணன்: வீடு, விவசாய நிலங்கள். 15 சவரன் தங்க நகைகள், மனைவி பெயரில் 57 சவரன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி. மனைவி பெயரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் போர்டு கார். 15.44 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்.

நீதிபதி ஜெயபால்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு, மனைவி பெயரில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாய நிலங்கள், மூன்று சவரன் நகை, அம்பாசிடர் டீசல் கார். மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 20 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.

நீதிபதி வெங்கட்ராமன்: சென்னை, செங்கல்பட்டில் வீடு, மனைவி பெயரில் தஞ்சாவூரில் 3.5 ஏக்கர் விவசாய நிலம். 10 சவரன் நகை, மனைவி பெயரில் 90 சவரன் நகை, ஐந்து கிலோ வெள்ளி. வீட்டுக்கடன் உண்டு.


நீதிபதி சந்துரு: சென்னை மயிலாப்பூரில்12.5 லட்சம் மதிப்பில் இரண்டு படுக்கையறை வீடு, மனைவி பெயரில் அபிராமபுரத்தில் 33 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று படுக்கையறை வீடு. விவசாய நிலங்கள் இல்லை. கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளில் 38.38 லட்சம் ரூபாய் சேமிப்பு. சகோதரர் மற்றும் மைத்துனரிடம் வாங்கிய கடன் ரூ.31.20 லட்சம். மனைவிக்கு ஆயிரம் கிராம் தங்கநகைகள், 12 கிலோ வெள்ளி.

நீதிபதி ராமசுப்ரமணியன்: சேமிப்பு, இன்சூரன்ஸ், மனைவி பெயரில் மாருதி கார் மற்றும் 40 சவரன் நகை, வைரக் கம்மல், வைர மூக்குத்தி, மகளுக்கு 30 சவரன் நகை.



நீதிபதி மணிக்குமார்: மனைவிக்கு 115 சவரன் நகை, 4.15 கிலோ வெள்ளி. ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பழைய மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஏ.செல்வம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு வீடுகள், 2.36 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு, மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன்.


நீதிபதி சிவகுமார்: சிவகங்கை மாவட்டத்தில் வீடு, 11 ஏக்கர் விவசாய நிலம், 19 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 30 சவரன் நகை, மனைவி பெயரில் 50 சவரன் நகை. டொயோட்டா குவாலிஸ் கார்.


நீதிபதி ராஜசூர்யா: மனைவி பெயரில் புதுச்சேரியில் இருவீடுகள்; ஏழு லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 50 சவரன் நகை. சான்ட்ரோ கார், பஜாஜ் மோட்டார் சைக்கிள்.


நீதிபதி சுதந்திரம்: சென்னையில் இரு வீடுகள். ரூ.2.32 லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 300 சவரன் நகைகள், 12 கிலோ வெள்ளி, டாடா இண்டிகா கார்.


நீதிபதி நாகமுத்து: தஞ்சாவூரில் வீடு, குடும்ப விவசாய நிலம் 1.98 எக்டேர். 4.61 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 25 சவரன் நகைகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 175 சவரன் நகைகள்; ஐந்து கிலோ வெள்ளி. மாருதி கார், ஹுண்டாய் கார், மனைவிக்கு ஹுண்டாய் கார்.



நீதிபதி சசிதரன்: வங்கி சேமிப்பு 1.57 லட்சம் ரூபாய். 32 கிராம் நகைகள், மனைவிக்கு 1,200 கிராம் நகைகள், 40 காரட் வைரம். டாடா இண்டிகா கார், பஜாஜ் ஸ்கூட்டர்.

நீதிபதி பெரியகருப்பையா:
சென்னை, மதுரையில் வீடுகள்; தேனி மாவட்டத்தில் விவசாய நிலம் (குடும்பச் சொத்து). 6.80 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 20 சவரன் நகைகள், மனைவிக்கு 100 சவரன், மாருதி ஆம்னி வேன், பஜாஜ் ஸ்கூட்டர். மகனுக்கு 15 லட்சம் ரூபாய் கல்விக் கடன்.


நீதிபதி ராமநாதன்: 10 சவரன் நகை, மனைவி பெயரில் 100 சவரன் நகை, 30 காரட் வைரம், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில் டாடா இண்டிகா கார். கொடைக்கானலில் வீடு கட்ட 12 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.


நீதிபதி ராஜஇளங்கோ: வங்கி சேமிப்பு 8.4 லட்சம் ரூபாய். வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மனைவிக்கு 1,200 கிராம் தங்க நகைகள், 10.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா கார். ரூ.2.5 லட்சம் வங்கிக் கடன், ரூ.35 லட்சம் வீட்டுக் கடன்.


நீதிபதி மாலா: மதுரையில் காலி மனைகள். விவசாய நிலங்கள் இல்லை. 75 சவரன் நகைகள், ஏழு கிலோ வெள்ளி. கடன் பாக்கி 11 ஆயிரத்து 700 ரூபாய்.

நீதிபதி அருணா ஜெகதீசன்: சென்னையில் இரு வீடுகள், விவசாய நிலங்கள் இல்லை. 2.84 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 75 சவரன் நகைகள், ஐந்து கிலோ வெள்ளி. கணவருடன் சேர்ந்து வீட்டு மனைக் கடன் 25 லட்சம் ரூபாய். இவ்வாறு இணையதளத்தில் விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

வீடு, வாகனம் வாங்கிய கடனும் உண்டு: தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள நிலம் மற்றும் இடங்களை, நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர். அதற்கான இன்றைய சந்தை மதிப்பு தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழக நீதிபதிகள் சொத்து விவரப்பட்டியல் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.பல நீதிபதிகள் சொத்து வாங்குவதற்கு, ஆறாவது சம்பளக் கமிஷன் உயர்வும், அதன் நிலுவைத் தொகையும் உதவியாக இருந்துள்ளது.



நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, அக்பர் அலி, சித்ரா வெங்கட்ராமன், சொக்கலிங்கம், சிரில் தாமரைச் செல்வம், தனபாலன், தர்மாராவ் ஆகியோருக்கு வீடு, வாகனம் வாங்கிய வகையில் கடன் இருக்கிறது.தலைமை நீதிபதி ஹேமந்த் லக்ஷ்மண் கோகலே பெயரில் வீடு, விளைநிலம், வைப்பு நிதி, இன்சூரன்ஸ், நகை, வாகனம் எதுவுமே இல்லை. கடனும் இல்லை. பரம்பரையாக வந்த நிறுவனப் பங்குகளும், 38 லட்சம் ரூபாய் வங்கியிருப்பும் உள்ளது.நீதிபதி தர்மாராவ், பெரும்பாலான சொத்துக்களை ஆந்திராவில் தான் வைத்துள்ளார்.


நீதிபதிகள் அக்பர் அலி சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் வீடுகள் வைத்துள்ளார்.தலைமை நீதிபதி கோகலே, தன் மனைவி பெயரிலான சொத்துக்களையும், நீதிபதி அருணா ஜெகதீசன், தன் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களையும் தனியாக பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர்.நீதிபதி பானுமதி, கைக்கடனாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்

இந்த சொத்து விவரங்களை,www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.





























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக