ராஞ்சி: "ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை' என, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஹவாலா, வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு, பணப் பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மது கோடா உள்ளிட்ட எட்டு பேர் மீது, வருமான வரி மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். மது கோடாவின் உதவியாளர் விகாஸ் சின்கா கைது செய்யப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக, மதுகோடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து, மது கோடா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜாவேத் அக்தார் கூறுகையில், ""மது கோடாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாது. இது குறித்து, நாளை (இன்று) டாக்டர்கள் முடிவு செய்வர்,'' என்றார். மதுகோடாவை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர்.இதனால், டிஸ்சார்ஜ் மதுகோடா கைது செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக