13 நவம்பர் 2009
பொதுமக்களிடம் ரூ25ஆயிரம் லஞ்சம் :கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அன்பரசன் கைது
கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பயன்படுத்தவதற்கான பொது பாதை அமைக்க பொதுமக்களிடம் ரூ25ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் அன்பரசன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பொது பாதையை அமைக்க வட்டாட்சியர் அன்பரசனிடம் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சிவபாலன் எனபவர் கோரிக்கைவைத்தார்.
அதோடு பொதுப்பாதை அமைக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் காட்டினார். ஆனால் வட்டாட்சியர் அன்பரசன் பொதுப்பாதை அமைக்க வேண்டுமானால் ரூ25ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்ற வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற போலீசார் அன்பரசனின் வீட்டை கண்காணித்துவந்தனர். இந்நிலையில் அன்பரசன் தன் வீட்டில் வைத்து சிவபாலனிடம் ரூ25 அயிரத்தை லஞ்சமாக பெற்றதை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியர் அன்பரசனை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. துறைவாரியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக