நீதிபதி தினகரனை தவிர மற்ற நான்கு பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான இன்று பதவியேற்கின்றனர்.
மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி பட்நாயக், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி திராத்சிங் தாக்கூர், குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன், கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி சுரேந்தர் சிங், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் ஆகியோரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் குழு முடிவு செய்தது.
ஆனால், இந்த ஐந்து பேரில், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் மீது ஊழல் புகார்கள் கூறப் பட்டதால், அவரின் பெயர் மட்டும் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இதையடுத்து, அந்த நான்கு பேரையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க அரசு ஒப்புதல் கொடுத்தது. அவர்கள் நான்கு பேரும் இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்கின்றனர். இதன்மூலம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31 என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக