11 நவம்பர் 2009
ரூ.2 இலட்சம் லஞ்சம் வாங்கிய I A S அதிகாரி கைது
பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வாணிபத் துறையின் செயலராகப் பணியாற்றிவரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ரூ.2 இலட்சம் லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று வந்த லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபரிடமிருந்து தொழில் மற்றும் வாணிபத் துறையின் செயலர் மற்றும் இயக்குனராக உள்ள விஜய் குமார் ஜான்ஜூவா லஞ்சம் வாங்கியபோது அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட I A S அதிகாரி விஜய் குமார் மொஹாலி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி லலித் குமார் சிங்ளா முன் நிறுத்தப்பட்டார். அவரை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவரை 10 நாள் விசாரணைக் காவலில் எடுக்க ஊழல் தடுப்புத் துறை மனுச் செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள விஜய் குமார் ஜான்ஜூவா 1998ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்து I A S அதிகாரி ஆவார். இவருடைய சொத்து, வங்கி இருப்பு ஆகியவற்றை ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக