19 நவம்பர் 2009
மது கோடாவின் சொத்து ஒரு கோடி ரூபாய் தானாம் !
பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மதுகோடா, தனது தேர்தல் மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளபடி அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று இப்போது தெரியவந்துள்ளது.இரும்புச் சுரங்கத்தில் தினக்கூலியாக வாழ்வை ஆரம்பித்த மதுகோடா, படிப்படியாக வளர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார்.
2005ல் ஜகன்னாத்பூர் தொகுதியிலும், 2009ல் சிங்பும் தொகுதியிலும் போட்டியிட்டவர். இப்போது அவர் சிங்பும் தொகுதியின் எம்.பி.,இரு தேர்தல்களிலும் மதுகோடா மனு தாக்கல் செய்துள்ளார். அவற்றில் தனது சொத்து மதிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும் கையிருப்பு என்று 2005ல் குறிப்பிட்டுள்ளார்.
2009ல் அவரது கையிருப்பு 13.6 லட்ச ரூபாய். 2005ல் அலகாபாத் வங்கியில் மட்டும் பங்கு வைத்திருந்தார். 2009ல் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பாரத ஸ்டேட் வங்கியில் பங்கு வைத்துள்ளார்.ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்புடைய நகைகள் 2005ல்; 2009ல் அவற்றின் மதிப்பு 37 லட்ச ரூபாய். ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய விவசாய நிலம் 2005ல்; நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் இப்போதுஇன்றைய நிலையில் அவரது அசையாச் சொத்துக்களின் மதிப்பு நான்கு லட்ச ரூபாய். அசையும் சொத்துக்களின் மதிப்பு 94 லட்ச ரூபாய்.சொத்துக்களில் பெரும்பாலானவை அவர் பெயரில் தான் இருக்கின்றன. நகைகள், நிலம் போன்றவை அவர் மனைவி கீதா பெயரில் உள்ளன.இப்போது, 4,000 கோடி ரூபாய் ஊழல் விஷயமாக மதுகோடாவிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக