ரயில்வே தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 20 நகரங்களில் இருக்கும் தேர்வாணையங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த 20 தேர்வாணையத்தின் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவிட்டார்.
இவர்களில் பெரும்பாலானோர் லாலு பிரசாத் யாதவ் மந்திரியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களது பதவி காலத்தில் லஞ்சம், முறைகேடுகள், மற்றும் வினாத்தாள் அவுட் ஆகியவை அதிகரித்திருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட வடமாநிலங்களில் நடந்த ரெயில்வே தேர்வுகளிலும் வினாத்தாள் அவுட் ஆகி இருந்தது. தேர்வாணைய தலைவர் பணியிடங்களுக்கு மூத்த ரெயில்வே அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக