ஊழல் பெருகியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம் கிடைத்துள்ளது. 180 நாடுகளுக்கு எடுக்கப்பட்ட கணக்கில் ஒவ்வொரு நாட்டின் நேர்மை தன்மை ஆராயப்பட்டது.
இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டும் இந்தியா இந்த பட்டியலில் இதே இடத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் லஞ்சம் பெறுவதில் யார் முன்னிலை ? யார் பின்னிலை ? லஞ்சமே இல்லாத நாடுகள் எது என ஆய்வு செய்யப்பட்டடது. பெர்லினில் இயங்கும் டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் , ஆப்ரிக்கன் வளர்ச்சி வங்கி, ஆசியன் வளர்ச்சி வங்கி, எக்னாமிக் இன்டலிஜென்ஸ் யூனிட் , பெர்டல்ஸ்மான் பவுன்டேஷன், பிரீடம் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த லஞ்சப்பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விவரம் வருமாறு
இந்த பட்டியலை பொறுத்த மட்டில் உலக அளவில் 180 நாடுகளை மையமாக வைத்து இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் 10 புள்ளிகள் குறிப்பிட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் படி 10 புள்ளிகளுக்கு எவ்வளவு புள்ளிகள் குறையுகிறதோ அந்த அளவிற்கு லஞ்சத்தில் மோச நிலையை உணர்த்துவதாக கணக்கிடப்பட்டது. அதாவது ஒரு புள்ளி இருக்கும் நாட்டில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பது கணக்கு. இதன் படி இந்தியா உலக அளவில் 3. 4 மார்க் புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்தியா 84 வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2001 ல் 2.1 புள்ளிகள் பெற்றிருந்தது , தற்போது பரவாயில்லை. இந்த கணக்கீட்டின்படி இந்தியா லஞ்சம் குறைந்துள்ளது. ஆசிய அளவில் ( ஆப்கன், பாகிஸ்தான், பங்களாதேஷ் , மியான்மர் ) நாடுகளை விட லஞ்சம் குறைவாக பெறும் நாடு என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
உலக அளவில் லஞ்சம் தலைவிரித்து தலையை சுற்றும் அளவிற்கு லஞ்சத்தில் சோமாலியா ( 1. 1 புள்ளிகள் ) கொளுத்து திளைக்கிறது. இது போல் ஆப்கானிஸ்தான் ( 1. 3 புள்ளிகள்) , பர்மா (1.4 புள்ளிகள்), சூடானும், ஈராக்கும் (1.5 புள்ளிகள் ) பெற்று இரண்டும் ஒரே தரம் 4 ம் இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டனும் ஜப்பானும் ( 7. 7 புள்ளிகள் பெற்று ) 17 வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா ( 7. 5 புள்ளிகள் ) பெற்று 18 வது இடத்தில் இருக்கிறது.
லஞ்சம் இல்லாத நாடுகளாக பட்டியலில் முதல் இடத்தை நியூஸிலாந்து ( 9. 4 புள்ளிகள்) , டென்மார்க் ( 9. 3புள்ளிகள்) , சுவீடன் ( 9.2 புள்ளிகள்) , சிங்கப்பூர் ( 9.2 புள்ளிகள்) , சுவிட்சர்லாந்து ( 9.0 புள்ளிகள்) ,ஆகிய நாடுகள் சபாஷை தட்டி பெற்றுள்ளது. இது போன்று இந்தியா லஞ்சம் இல்லாத நாடாக வரவேண்டும் . இந்தியா உலக அளவில் ( 3. 4 புள்ளிகள் ) பெற்று 84 வது இடத்தில் இருந்து விலகி லஞ்சம் இல்லாத நாடாக மாறும் நாள் எந்நாளோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக