புதியவை :

Grab the widget  Tech Dreams

16 ஆகஸ்ட் 2010

ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : நிலத்தை பிரித்து தனிப்பட்டா கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டையில் வசிப்பவர் பிலிப் பெர்க்மான்ஸ்(60). அரசு போக்குவரத்து நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பெயரில் பாளை.,கிருஷ்ணாபுரத்தில் உள்ள 20 சென்ட் நிலத்தை மகன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்தார். அதற்காக தனிப்பட்டா கோரி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். அந்த பணியினை மேற்கொள்ளவேண்டிய தலைமை சர்வேயர் வின்சென்ட்(57), சிவந்திப்பட்டி பிர்கா சர்வேயர் சிக்கந்தர் முகைதீன்(56) ஆகியோர் 3 மாதங்களாக வேலையை முடிக்காமல் இழுத்தடித்தனர். பிலிப் கேட்டபோது 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் காரியம் நடக்கும் என்றார்கள். லஞ்சம் தர விரும்பாத பிலிப், நெல்லை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., மனோகரகுமாரிடம் புகார் செய்தார். இன்று மாலையில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்தபோது பிலிப் கொடுத்த பணத்தை வாங்கிய சர்வேயர்கள் இருவரையும் டி.எஸ்.பி.,தலைமையிலான போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

1 கருத்து:

  1. வணக்கம், தங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல இருக்கு. எங்கள் ஊரில் சத்துணவு பணியாளர் குழந்தைகளுக்கு வரும் அரிசி முட்டை பருப்பு என அனைத்தும் திருடி விற்கிறார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுகிறார். இதை தடுக்க என செய்யலாம். எங்கே கம்ப்ளைன்ட் செய்றதுன்னு தெரியல.

    பதிலளிநீக்கு