புதியவை :

Grab the widget  Tech Dreams

22 டிசம்பர் 2009

கோவையில் பல கோடி சுருட்டல் ; நூதன மோசடி


கோவை : கோவையில் நூதன பிசினசில் இறங்கிய தனியார் நிறுவனம், மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டதாக, அதிர்ச்சி புகார் கிளப்பியுள்ளனர் முதலீட்டாளர்கள். கோவை, சாயிபாபா காலனியில், "யூரோபே அசோசியேட்ஸ்' எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பெயரில், ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால், ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி "ஆன்-லைனில்' குறிப்பிட்ட சில விளம்பரங்களை ரெகுலராக பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், ஆன்-லைனில் வெளியாகும் விளம்பரக் கட்டணத்தில், 50 சதவீதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகவும், இந்நிறுவனம் அறிவித்தது.

இதை நம்பி, பலர் இத்திட்டத்தில் இணைந்து பணம் செலுத்தினர். மக்களின் நம்பிக்கையை பெற, ஆரம்பத்தில் சிலருக்கு பணம் வழங்கிய நிறுவனத்தினர், கடந்த அக்டோபரில், நிறுவன அலுவலகத்தை மூடி விட்டு "எஸ்கேப்' ஆயினர். அங்கு பணம் செலுத்தி ஏமாந்த சிலர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மோசடியில் பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: கடந்த 2008ல், ஆன்-லைன் விளம்பரம் பார்க்க, ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விளம்பரங்களை பார்ப்பவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் 12 மாதம் வரை கொடுப்பதாகவும் கூறினர். 10 நாட்களுக்குள் 160 விளம்பரங்களை பார்க்க வேண்டும் என்றனர்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் விளம்பரம் பெற்று தமது இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக பெரிய தொகைகளை அவர்களிடம் பெற்றுக் கொண்டது. தமது இணைய தள விளம்பரங்களை பல்லாயிரம் பேர் பார்ப்பதாக "ஹிட்' எண்ணிக்கை கணக்கு காண்பிக்க, எங்களிடமும் பணம் பெற்று விளம்பரங்களை பார்க்க வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்வீடன் நாட்டில் தலைமை அலுவலகம் உள்ளதாகவும், இந்தியாவில் டில்லியில் பிரதான அலுவலகம் உள்ளதாகவும் கூறியதை நம்பி ஏமாந்தோம். கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கோவையில் 60 ஆயிரம் நபர்கள் இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஐயாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மாதங்களாக சாயிபாபா காலனியில் உள்ள நிறுவனத்தை திறக்க வில்லை. பிற பகுதிகளில் இருந்த அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், திருமுருகன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக