13 அக்டோபர் 2009
லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - சிபிஎம் வலியுறுத்தல்
அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குவதற்காக லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியலையும், எந்தெந்த நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தன என்பது பற்றியும் கண்டறிந்து உரியவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பிரோ) கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
நாட்டின் தேசிய நலனுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற இந்திய நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், பிரதமரின் முதன்மை செயலர் டி.கே.ஏ. நாயருக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக