புதியவை :

Grab the widget  Tech Dreams

07 அக்டோபர் 2009

இருப்பிடச் சான்றிதழ் வழங்க ரூ.400 லஞ்சம் வாங்கிய மனிதாபிமானம் மிக்க கிராம நிர்வாக அதிகாரி கைது, புது மீன் வலையில் சிக்கியது.



இருப்பிடச் சான்றிதழுக்காக லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரி ஊராட்சியைச் சேர்ந்தவர் வல்லவன் (32). இவருக்கும் இவரது சகோதரிகள் இருவருக்கும் வீட்டுக்கு மின் இணைப்பு பெற, இருப்பிடச் சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதியை அணுகினார்.

அப்போது அவர் தனக்கு ரூ.1500 வீதம் கொடுத்தால் சான்றிதழ் தருவதாக தெரிவித்தாராம். பின்னர் அதை தலா ரூ.600 வீதம் வழங்குமாறு தெரிவித்துள்ளார். பணம் வாங்கி வருவதாகச் சென்ற வல்லவன் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரரிடம் புகார் செய்தார்.

போலீசார் அளித்த ரூபாய் நோட்டுகளுடன் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் சென்றார். அங்கிருந்த தலையாரி மூர்த்தி ரூ.400 மட்டும் வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து வல்லவனிடம் இருந்த 6 நூறு ரூபாய் நோட்டுகளில் 4 நோட்டுகளை கிராம நிர்வாக அதிகாரி வாங்கினாராம்.

இந்த நிலையில், அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. குலோத்துங்கன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், ஜெயக்குமார் மற்றும் போலீஸசார் , கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருணாநிதி கடந்த வருடம்தான் கிராம நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


லஞ்ச கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதியின் மனிதாபிமானம் பாரீர்:

லஞ்சப்பணம் கை மாறும் பொது புகார்தாரர் வல்லவனுக்கு தெரிந்த தலையாரி ஒருவர் அங்கு வந்தார் . கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதியிடம் "வல்லவன் நல்ல மனிதர் கஷ்ட்டப்பட்டு வீடு கட்டி உள்ளார் .அவரிடம் அவ்வளவு தொகை கேட்க வேண்டாம்" லஞ்ச தொகையை குறைத்து கொள்ளுமாறு சிபாரிசு செய்து உள்ளார் .மனிதாபிமானம் உள்ள கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதி ரூ 600 லஞ்ச பணத்தில் ரூ 200 திரும்ப கொடுத்துள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக