திருத்தணி, அக்.20:விவசாய கடன் வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ.1000 லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு வங்கிச் செயலாளர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். | |
. | |
திருத்தணியை அடுத்த கீழ்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. சமீபத்தில் பயிர் கடன் பெறு வதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இவர் விண்ணப்பம் செய்திருந்தார். மேலும் வங்கியின் செயலாளர் துரைசாமியை சந்தித்து தனக்கு விரைவாக பயிர் கடன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது துரைசாமி ரூ.1000 கொடுத்தால்தான் கடன் தொகை கிடைக்கும் என்றும், இல்லை யென்றால் விண்ணப்பத்தை நிராகரித்து விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ராஜேந்திரன் ரூ.1000 கொடுக்க ஒப்புக் கொண்டார். துரைசாமி அதனை அலுவலகத்தில் தர வேண்டாம். அதிகாலையில் வீட்டிற்கு வந்து தருமாறு கூறியதாகவும் தெரிகிறது.இதனிடையே ராஜேந்திரன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின் பேரில் இன்று காலை துரைசாமி வீட்டுக்கு சென்று ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை லஞ்சப் பணத்தோடு கையும், களவுமாக பிடித்தனர். |
20 அக்டோபர் 2009
ரூ.1000 லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு வங்கிச் செயலாளர் துரைசாமி கைது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக