09 அக்டோபர் 2009
லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவி என்ஜினீயர் ரங்கராஜூ கைது
சென்னையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கிண்டி ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க கோரி வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மீண்டும் மின் இணைப்பு வழங்காமல் வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தின் உதவி என்ஜினீயர் ரங்கராஜூ (வயது 47) நீண்ட நாட்கள் அலைய விட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக என்ஜினீயர் ரங்கராஜபு பேரம் பேசினார். ஆனால் ரூ.5 ஆயிரம் கொடுக்க முடியாது என்றும், ரூ.2 ஆயிரம் தருவதாகவும் அசோக்குமார் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசிலும் ரகசியமாக புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் காத்திருந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில் ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கிய போது கையும், களவுமாக பிடிபட்டு என்ஜினீயர் ரங்கராஜூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் இரவு அவர் நீதிமன்ற காவலில் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக