10 அக்டோபர் 2009
ஊழலுக்கு எதிரான மற்றொரு சுதந்திரப் போர் !
கரூர்: இந்திய மக்கள் சங்கம் சார்பில் ஊழலுக்கு எதிரான பிரசார ஊர்வலம் கரூரில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 2 ம் தேதி மதுரையில் தொடங்கிய ஊழலுக்கு எதிரான பிரசார ஊர்வல குழுவினர் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரசாரம் செய்து நேற்று கரூர் வந்தனர்.
அங்கு கரூர் லைட்அவுஸ் கார்னர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து, துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.
துண்டுப் பிரசுரத்தில், லஞ்சம் வாங்குவது, கொடுப்பது குற்றம், ஊழலை ஒழிப்போம் போன்ற வாசகங்களுடன் லஞ்சத்தை ஒழித்திடும் வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டிருந்தது.
இந்த இயக்கம் ஊழலுக்கு எதிரான மற்றொரு சுதந்திரப் போர் என்றும், இதில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து பணியாற்றி லஞ்ச ஊழலற்ற இந்தியா உருவாக முன்வர வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தர்.
இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் கே.பி. மாரிக்குமார். பொதுச் செயலர் கே. ஆனந்தன், இணைச் செயலர் ஆர்.ஜெ. சுனீஷ், மாவட்டப் பொறுப்பாளர் எம். அன்பு உள்ளிட்ட 15 பேர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக