07 அக்டோபர் 2009
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிதாக டிஜிபி பதவி.
சென்னை, அக். 6: லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிதாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இத் துறையின் முதல் டிஜிபியாக போலாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை இயக்குநர் ஒருவரின் தலைமையில் இயங்கி வந்தது. இதில் இயக்குநர் பதவியில் ஏடிஜிபி, ஐஜி நிலையிலான அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர்.
தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு விவகாரத்தின் போது இயக்குநராக இருந்த ஏடிஜிபி உபாத்யாயா தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அப் பதவிக்கு ஏடிஜிபி ராமானுஜம் நியமிக்கப்பட்டார். இப்போதும் அவர் தொடர்கிறார்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஜிபி பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அதில் போலாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
1976-ம் வருட பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான போலாநாத் அண்மையில் டிஜிபியாக நிலை உயர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக