07 அக்டோபர் 2009
ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பள்ளிபாளையம் சர்வேயர் கருப்பண்ணன் கைது.
நாமக்கல், அக். 6: விவசாயி நிலத்தை அளந்து தருவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
சேலம், குகை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (57). இவர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பிர்க்காவுக்குட்பட்ட பகுதியில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இந்த பிர்க்காவுக்குட்பட்ட எலந்தைகுட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் (34) என்பவர் தனது நிலத்தை அளந்து தருவதற்காக வருவாய்த்துறையை அணுகினார். திருச்செங்கோட்டில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் நிலத்தை அளப்பதற்காக மனு செய்திருந்தார். இவரது நிலத்தை அளந்து தருமாறு கோட்டாட்சியரும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் சர்வேயர் கருப்பண்ணன். மேலும், நிலத்தை அளந்து தர தனக்கு லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். இறுதியாக ரூ. 2 ஆயிரம் கொடுக்க பிரகாஷ் சம்மதித்துள்ளார். இந்த பணத்தை ஐந்துமனை பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு காலையில் கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார் கருப்பண்ணன். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôருக்கும் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை கருப்பண்ணன் அலுவலகத்தில் ரூ. 2 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீஸôர் கருப்பண்ணனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக