புதியவை :

Grab the widget  Tech Dreams

21 ஆகஸ்ட் 2009

உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் - மின்இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம்



கிணத்துக்கடவு: விவசாய நிலத்திற்கு மின்இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிணத்துக்கடவு துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை, கோவை லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகிலுள்ள கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் சந்திரசேகரன்(41); இவர் 2007ம் ஆண்டு முதல் பணிபுரிகிறார்.



அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணசாமி(52); விவசாயத்திற்கு மின்னிணைப்பு கேட்டு 2007ம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்.தற்போது மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு பெற, நாராயணசாமிக்கு கடிதம் வந்ததையடுத்து, மின் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, "உங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க மூவாயிரம் ரூபாய் வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.இது குறித்து, நாராயணசாமி கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கிணத்துக்கடவு வந்தனர்.



நாராயணசாமி நேற்று மதியம் 12.30 மணிக்கு கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனிடம் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.அப்போது, திடீரென அங்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை கையும் களவுமாகப் பிடித்தனர். போலீசாரைப் பார்த்ததும் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் வாயில் போட்டு விழுங்க உதவி பொறியாளர் முயற்சித்துள் ளார். போலீசார் பாய்ந்து சென்று, வாயில் திணித்த மூன்று ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக