கடலூர், ஆக.25-
தஞ்சாவூர் என்.கே. சாலையை சேர்ந்தவர் அமீர் சையத். மனித உரிமை கழக கண்காணிப்புகுழு பொது செயலாளராக உள்ளார். நேற்று இவர் 25 வகையான சட்ட புத்தகங்களை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வந்தார். அங்கு ஜெயிலில் வார்டனாக பணிபுரிந்த பழனியிடம் இந்த புத்தகங்களை நூலகத்தில் வைக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார்.
அதற்கு பழனி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து அமீர்சையத் கடலூர் லஞ்சஒழிப்பு போலீ சாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினத் தின் ஆலோசனைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை அமீர் சையத்திடம் கொடுத்து அனுப்பினர். அதனை அமீர் சையத், ஜெயில் வார்டன் பழனியிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், திருமால் ஆகியோர் பழனியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக