காஞ்சீபுரம், ஆக.25-
திருக்கழுக்குன்றத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில் பத்திரப் பதிவுகளுக்கு லஞ்சம் வாங்கப் படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு வந்தன.
இதையொட்டி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பாலசுப்பிரமணியம், டி.எஸ்.பி. விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன் ஆகியோர் அங்கு நேற்று மாலை சென்று சோதனை மேற்கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நடைபெற்றது.
சோதனையின்போது யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. சார்பதிவாளர் பன்னீர் செல்வம் மற்றும் அலுவலர் களின் மேஜை டிராயர், ஆவணங்கள், குப்பை கூடைகள் போன்ற பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.27,600 பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் பன்னீர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக