
14 ஜனவரி 2010
வீட்டு மனை பட்டா வழங்க லஞ்சம் முன்னாள் சர்வேயர் பிடிபட்டார்

13 ஜனவரி 2010
ஊட்டி: லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் "ரெய்டு' - 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

ஊட்டி: பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் இரு உதவி செயற்பொறியாளர்கள் சிக்கினர்; அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. பேரூராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு இந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் கையெழுத்திட்ட பின்னர் வட் டார வளர்ச்சி அலுவலர் மூலம் காசோலை வழங்கப்படும். இந்நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளுக்கான தொகையை வழங்க உதவி பொறியாளருக்கு இரண்டு சதவீதம், உதவி செயற் பொறியாளர் "ஸ்குயருக்கு' மூன்று சதவீதம் கமிஷன் பெறப் படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் திடீர் "ரெய்டு' நடத்தினர்.
இதில் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்ற இரு உதவி செயற்பொறியாளர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட் டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது; பேரூராட்சிகளின் உதவி இயக் குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்க கமிஷன் பெறப்படுவதாக எங்களுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் இன்று திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஸ்குயராக பணியாற்றும் நடேசன் மற்றும் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த மாதம் துடியலூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ரங்கபோஜூ ஆகியோர் சிக்கினர்.
ரங்கபோஜூ துடியலூருக்கு மாற்றம் ஆன பிறகு, அவர் காலத்தில் நடந்த பணிகளுக்கு பில்கள் வழங்க ரங்கபோஜூ மற்றும் நடேசன் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டுள்ளனர். இன்று நடந்த ஆய்வில் இருவரிடமும் 30 ஆயிரம் ரூபாய் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகை எப்படி அவர்களிடம் வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு, பெரோஸ்கான் கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் நெடுஞ்சாலைத்துறையில் ரெய்டு நடத்தினர். நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருவது அரசு அலுவலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் அதிகமாக தங்கள் பணிகளுக்கு நாடும் அலுவலகங்களில் ரெய்டு நடக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மானேஜர் கைது.

வடபழனியில் உள்ள தென்சென்னை கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் ஒப்புதல் தர ரூ.6 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று சங்கத்தின் மானேஜர் ராஜ்குமார் கேட்டுள்ளார்.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் தரவேண்டும் எனக்கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த நடராஜன் ரகசியமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.
மானேஜர் லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு நிரூபிக்க ரூ.2000 கரன்சி நோட்டுக்களின் மீது நுண்ணிய ரசாயன பவுடரை தடவி, அதை நடராஜனிடம் கொடுத்தனர்.
மானேஜர் ஏற்கனவே கேட்டபடி, லஞ்சப்பணத்தை நடராஜன் நேற்று கொண்டுவந்து கொடுத்தார். அந்த பணத்தை மானேஜர் வாங்கியதும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து மானேஜரை மடக்க முயன்றனர்.
லஞ்ச பணத்தை கையில் வாங்கிய மானேஜர், போலீசார் பிடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் தப்பி ஓடினார். பாத்ரூமில் இருந்த தண்ணீருக்குள் லஞ்ச பணத்தை போட்டுவிட்டார். போலீசார் தடவியிருந்த ரசாயன பவுடரை அழிப்பதற்காக மானேஜர் முயற்சித்தார்.
ஆனால் போலீசாரும் பாத்ரூமுக்கு சென்று தண்ணீரில் கிடந்த கரன்சியை உடனடியாக எடுத்தனர். ரசாயன பவுடரும் அழியவில்லை. பின்னர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
12 ஜனவரி 2010
இந்தியாவில் ஆண்டுக்கு புழங்கும் லஞ்சத் தொகை 21 ஆயிரம் கோடி ! - அடங்கப்பா !

இந்தியாவில், ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சப் பணம் புழங்குவதாக உலக வங்கி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்து என்று சென்னை லயோலா வணிக நிர்வாக நிறுவன இயக்குனர் கிறிஸ்டி தெரிவித்துள்ளார். மதுரை பாத்திமா கல்லூரி மேலாண்மைத் துறையில் மேலாண்மை கல்வியில் ஏற்படுத்த வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சென்னை லயோலா வணிக நிர்வாக நிறுவன இயக்குனர் கிறிஸ்டி கலந்து கொண்டு பேசியதாவது
இந்தியாவில் 2000 மேலாண்மை பள்ளிகள் உள்ளன. அதில் 25 நிறுவனங்கள் தான், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைத் முறையாக தருகின்றன. மீதி 50 சதவீத மாணவர்கள், என்ன படித்தோம் என தெரியாமலே வெளியேறும் சூழ்நிலை நிலவி வருகின்றது.
ஆளுமைத்தன்மை, தொடர்பாற்றல்,தொழில்நுட்பத்தி
இந்தியாவில் நெறிமுறைகள், கொள்கைகளை மீறி, நிறுவனங்கள் லாபத்தை நோக்கியே செயல்படுகின்றன.
குறிப்பாக வர்த்தக உலகில், லஞ்சம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.அதன் படி இந்தியாவில் 21 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது.
மேலாண்மைப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடத்திட்டங்கள், அமெரிக்க கலாச்சாரம், வணிகத்தை பின்பற்றியுள்ளது. தொழிற்துறையில் இந்த அணுகுமுறை நீண்டநாட்களுக்கு தாக்குபிடிக்காது.
இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, கருத்துக்கள், செயல்பாடுகள் அடங்கிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என்றார்.
சென்னையில் மேலும் ஒரு மோசடி நிறுவனம்: லட்சக்கணக்கில் சுருட்டிய போலீஸ் அதிகாரி மகள்; ஏமாந்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை
11 ஜனவரி 2010
லஞ்சம் : காளையார்கோவில் மின்வாரிய பொறியாளர் கைது

வலையம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம்(43). நூற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர், தனது புது வீடு மின் இணைப்பிற்கு மறவமங்கலம் மின்வாரியத்தில் விண்ணப்பித்து 1600 ரூபாய் முன்பணம் செலுத்தினார். காலதாமதம் ஆனது.இதனால், வீட்டு வேலைக்காக அருகில் குடியிருந்த சேசு என்பவர் வீட்டில் இருந்து ,மின்சாரத்தை பயன்படுத்தினார். தகவல் அறிந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர், சேசு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தார்.
தன்னால், இணைப்பு துண்டித்ததை அறிந்த ஆரோக்கியம், பொறியாளரை சந்தித்தார்.அப்போது பொறியாளர்,"" திருட்டு மின்சாரம் எடுத்ததற்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கலாம். அபதாரம் விதிக்காமல், மறுஇணைப்பு தர 4500 ரூபாய் தருமாறு'' கேட்டார். இதற்கு சம்மதித்த ஆரோக்கியம், முதற்கட்டமாக 2000 ரூபாய் கொடுத்தார். மீதம் பணத்தை தருவதற்கு முன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
சென்னை- சிபிஐயின் 2009 முக்கிய வழக்குகள்

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய குற்ற புலனாய்வுத் துறையின் சென்னை ஊழல் தடுப்பு பிரிவு 71 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவற்றில் பொறி வைத்து பிடித்த 12 வழக்குகளும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 16 வழக்குகளும் அடங்கும்.
2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் அடங்குவார்கள். 81 வழக்குகளில் புலனாய்வு நடத்தப்பட்டுள்ளது. 54 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வழங்கப்பட்டது. வருமான வரித் துறை, இந்திய உணவுக் கழகம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், பிஎஸ்என்எல், ரயில்வே பாதுகாப்பு படை, அஞ்சல் துறை, பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இதில் அடங்கும்.
2009-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடியே 56 லட்சத்து 85 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்காக எஸ்எம்எஸ் இயக்கம் ஒன்று 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக ஊழல் தொடர்பான புகார்களை சிபிஐ-யிடம் தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, புலனாய்வு செய்யப்பட்ட சில முக்கிய வழக்குகளின் விவரம்:
லஞ்சம் பெற்றதாக சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் தனியார் டிராவல் ஏஜென்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சியில் மூத்த மருத்துவ அதிகாரியான அவரது கணவர் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.5 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் குடியேற்ற பாதுகாவலராகப் பணியாற்றி வந்த இந்திய வருவாய் பணி அதிகாரி மற்றும் இரண்டு தனிநபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அதிகாரி தனது மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ப்பதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததும் பலரிடம் இருந்து லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரொக்கமாக ரூ.2.13 கோடியும், ரூ.2.17 கோடி மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் மீது முறைகேடு செய்து ரூ.20 கோடி அளவிற்கு சென்னை துறைமுகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் துணை பாதுகாவலர் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகள் 12 பேர் லஞ்சம் பெற்றதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை எண் 7 மற்றும் 5-ல் பணிகள் நிறைவடையும் முன்பாக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் வழங்கியதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை பொது மேலாளர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் அறக்கட்டளை மீதும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
09 ஜனவரி 2010
ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் கைது?


சென்னையை தலைமையிடமாக கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 120 கிளை நிறுவனங்கள் உள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் பிரபலமாக திகழ்ந்தது. சென்னையில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ஜஸ்டின் தேவதாஸ்.
சென்னையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணாநகர் 18 வது மெயின் ரோட்டில் உள்ளது. வீட்டுமனைகளை விற்பனை செய்வதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். 1/4 கிரவுண்டு, 1/2 கிரவுண்டு, 1 கிரவுண்டு, 2 கிரவுண்டு என்று இடங்களை தமிழகம் முழுவதும் சலுகை விலையில் விற்பதாக இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது. இடங்களை விற்பதற்காக இந்த நிறுவனம் புகழ் பெற்ற தலைவர்களின் பெயரிலும், மக்களை கவரும் இதர பெயர்களிலும் வீட்டுமனை திட்டங்களை அறிவித்தது.
அப்துல்கலாம் நகர், வெற்றி நகர், உழைப்பாளர் நகர் என்றெல்லாம் தங்களுடைய வீட்டுமனை திட்டத்தின்கீழ் நிலங்களை வழங்கும் இடங்களுக்கு பெயர் சூட்டியிருந்தது. கிறிஸ்தவ மக்களை கவருவதற்காக ஏதேன்ஸ் கார்டன்' என்றும் பெயர் வைத்திருந்தார்கள். இந்த நிறுவனத்தில் நிலம் வாங்குபவர்கள் முதலில் ரூ.5 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு எவ்வளவு நிலம் தேவையோ அதற்கு ஏற்றாற்போல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மக்கள் செலுத்தும் கட்டணத்தை உரிய வட்டியோடு ஒரு ஆண்டில் திருப்பி தந்துவிடுவோம் என்றும், அவர்கள் வாங்கிய நிலத்தையும் சந்தோஷமாக பதிவு செய்து கொடுப்போம் என்றும் பரபரப்பான அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டது.
இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் லட்சக்கணக்கில் வரை பணம் கட்டியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் ஜே.பி.ஜே. நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜே.பி.ஜே. நிறுவனம் திடீரென்று மூடப்பட்டுவிட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெரிய பூட்டு தொங்கியது.
வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை வட்டியோடு திருப்பித் தருவதாக சொன்ன அந்த நிறுவனம் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. இதற்காக வழங்கிய வங்கி காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக ஜே.பி.ஜே. நிறுவனம் மீது புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது பற்றி விசாரித்து வந்தனர். யாரையும் ஏமாற்றமாட்டோம், நாங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றுவோம்' என்று ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ், போலீசாருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உறுதி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாகவும், அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரமாக தகவல் பரவியது. சென்னை அண்ணாநகரில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் மூடப்பட்டு இருந்தது, இதை உறுதி செய்வது போல இருந்தது. இதை கேள்விப்பட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் கடந்த 7ஆம் தேதி இரவு அண்ணாநகரில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது.
ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் எப்போதும் போல நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்' என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பாத பொதுமக்கள் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுத்து வந்தனர். அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திலும் ஏராளமானோர் குவிந்தனர். நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் கறந்து மோசடி செய்துவிட்டதாக பொதுமக்கள் ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார் கூறினார்கள்.
ரூ.1,000 கோடி வரை சுருட்டிவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் சுமார் 60 பேர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே ஜே.பி.ஜே. நிறுவனம் மீது 80 பேர் புகார் கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜஸ்டின் தேவதாஸ் உள்பட அவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றும்படி டி.ஜி.பி. ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் இப்போது வந்துள்ள புகார்களும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜஸ்டின் தேவதாஸ் உண்மையிலேயே பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று கூறினார்.
08 ஜனவரி 2010
ரூ.500 லஞ்சம் வாங்கிய பேரம்பாக்கம் சார் பதிவாளர் தாரணி கைது.
அடுத்த போரூர் ராமாபுரத்தைச் சேர்ந்த கிறுஸ்டியின் மகள் ஆனந்தி (22). இவருடைய உறவினர் ராணி பேரம்பாக்கத்தை அடுத்த அழிஞ்சிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்க ராணி 30.12.09-ல் ஆனந்தி பெயருக்கு பொது அதிகாரப் பத்திரம் வழங்கினார்.
பத்திரம் பேரம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொது அதிகாரப் பத்திரம் வாங்க ஆனந்தி வியாழக்கிழமை பேரம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பத்திரம் கேட்டபோது சார் பதிவாளர் தாரணி ரூ.500 கொடுத்தால் தான் பத்திரம் தருவேன் என கூறியுள்ளார். இதை கேட்ட ஆனந்தி நாளை தருவதாக கூறி வந்து விட்டார்.
ஆனந்தி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விஜயராகவனிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர்களின் ஆலோசனைப் படி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரசாயண பவுடர் தடவிய 100 ரூபாய் நோட்டுக்கள் 5-ஐ ஆனந்தி, சார் பதிவாளர் தாரணியிடம் கொடுத்தார்.
வாங்கிய தாரணி, அலுவலக உதவியாளர் தேவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்து நின்றிருந்த டிஎஸ்பி விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், கலைச்செல்வன், சரவணன் ஆகியோர் சென்று தாரணி, தேவன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
07 ஜனவரி 2010
லஞ்சம் வாங்கிய திருச்சி கோட்ட ரயில்வே துறையினர் இருவர் கைது .

ரயில்வே துறையில், கருணை அடிப்படையிலான, பணி பெறுவதுக்கு, சட்டரீதியான பரிந்துரை கடிதம் அளிக்க 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி கோட்ட ரயில்வே சட்டப்பிரிவு அலுவலக தலைமை உதவியாளர் மற்றும் அவருக்கு உதவிய வக்கீல் ஆகிய இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் பக்கிரிசாமி. இவர், பணியின் போது இறந்ததால் அவரது மகன் தனசேகரன், வாரிசு அடிப்படையில் ரயில்வே வேலை பெறுவதுக்கு முயற்சி செய்து வந்தார். ரயில்வே விதிமுறைகள்படி வேலை பெறுவதுக்கு, சட்ட ரீதியான பரிந்துரை கடிதம் பெற வேண்டியிருந்தது. அதற்காக கோட்ட ரயில்வே அலுவலக வளாகத்திலுள்ள சட்டப்பிரிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தலைமை சட்ட உதவியாளராக ஜெயசேகரன், சட்ட ரீதியான பரிந்துரை கடிதம் வழங்குவதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். தனசேகரன், இதுகுறித்து சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் செய்தார்.
சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 13 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜெயசேகரனிடம் வழங்கினார். லஞ்சப்பணத்தை பெற்றுத் தருவதுக்கு, ரயில்வே நிர்வாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்த வக்கீல் ஜெயராமன் உதவினார். அப்போது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள், ஜெயசேகரன், ஜெயராமன் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து, ஜெயசேகரனின் வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் சிக்கியதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட ஜெயசேகரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரையும் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் இரவு கொண்டு சென்றனர்.
சென்னை ஏர்போர்ட் - லஞ்சம் : சுங்க அதிகாரிகள் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு சுங்க இலாகாவில் துணை கமிஷனராக பணிபுரிபவர் சுந்தர்ராஜன். அதே பிரிவில் மதிப்பீட்டு அதிகாரியாக ரமணி உள்ளார்.
கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் மின்னணு சாதன உதிரிப்பாகம் அனுப்பப்பட்டது. இதுபோன்ற பொருட்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாக இருந்தால் அதை கூரியர் பார்சலில் அனுப்ப முடியாது. புதிய பொருட்களாக இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும்.
பயன்படுத்தப்பட்ட பொருட்களை அனுப்பினால் அதற்கு அபராதத்தோடு சுங்கவரி வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்களுக்கு அபராதம் இல்லாமல் சுங்கவரி வசூலிக்க அதிகாரிகள் ரூ.2,500 லஞ்சம் கேட்டனர்.
இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சி.பி.ஐ போலீசார் வழக்குப் பதிவு செய்து மறைந்திருந்து கண்காணித்தனர். அதிகாரிகள் சுந்தர்ராஜன், ரமணி ஆகியோர் ஷாகுல் ஹமீதிடம் இருந்து ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாக பிடிபட்டனர்.
அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று மாலையில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்க மாறுவேடத்தில் காத்திருந்தனர். மூலம் ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சரக்குப் பெட்டகப் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கும்.
அந்த பொருட்களை பெறுவோர் வரியை குறைத்து கட்டுவதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 9 பேர் மற்றும் 2 ஏஜெண்டுகளை கடந்த மாதம் போலீசார் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
1000 கோடி மோசடி : JPJ நிறுவனர் தப்பி ஓட்டம்

ஜேபிஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வந்தது. வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.
தமிழகம், கர்நாடகம், ஆந்திராவில் ஆயிரம் கோடி இவர் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையி ஜேபிஜே தப்பி ஓடிவிட்டார்.
ஜேபிஜேவின் அனைத்து கிளைகளூம் மூடப்பட்டுள்ளன. சென்னையில் அலுவலகத்தின் அலுவலர்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர்.
ஜேபிஜே பெங்களூருவில் தலைமைறைவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
06 ஜனவரி 2010
லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அமுதா கைது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமார். இவர் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்தபின், அடகு நகை ஏலதாரராக உரிமம் பதிவு பெறுவதற்காக கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அதற்காக, தாசில்தார் எஸ்.அமுதா (வயது52), ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், இது குறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார்.
போலீசார் ஏற்பாடு செய்தபடி, ராஜகுமார் ரூ.1000 லஞ்சம் கொடுத்தபோது, அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தாசில்தார் அமுதாவை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரிடம் போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தி கைது செய்தனர். தாசில்தார் அமுதா இன்னும் 2 மாதத்தில் துணை கலெக்டராக பதவியேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
05 ஜனவரி 2010
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு :ஏர்போர்ட் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், விமான நிலைய தொழில் நுட்ப மேலாளர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை, மீனம்பாக்கம், இந்திய விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆணையத் தகவல் தொழில்நுட்ப மேலாளர் பாஸ்கரன் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ., கடந்த 2008ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. கடந்த 2000 ஜனவரி 1ம் தேதி முதல் 2008 மார்ச் 3ம் தேதி வரையிலான காலத்தில் வருமானத்திற்கு மேல் சம்பாதித்த 52 லட்சத்து 17 ஆயிரத்து 248 ரூபாய்க்கு தனது பெயரிலும், தனது தாயாரின் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியதாகவும், 28 லட்சத்து 6 ஆயிரத்து 293 ரூபாய்க்கு தகுந்த, திருப்தியான விளக்கம் அளிக்க முடியவில்லை என்று பாஸ்கரன் மீது சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணையில், அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை உண்மை என்று தெரிய வந்துள்ளது. மேலும், 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வரையிலான காலத்தில் இந்திய விமான நிலைய ஆணைய உதவி மேலாளர், மேலாளர் போன்ற பதவிகளில் பாஸ்கரன் இருந்த போது வருமானத்திற்கு மேல் சம்பாதித்துள்ளார். 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதியன்று கணக்குப்படி 40 லட்சத்து 56 ஆயிரத்து 447 ரூபாயும் 73 பைசா வருமானம் பெற்றுள்ள நிலையில் 39 லட்சத்து 19 ஆயிரத்து 5 ரூபாய் 93 பைசா வருமானம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.
கிடைத்துள்ள விமான நிலைய சாட்சிகள், கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் மூலம் பாஸ்கரன் மீதும் அவரது மனைவி லதா பாஸ்கரன் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கிற்கான குற்றப்பத்திரிகை சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புகார் செய்ய சி.பி.ஐ., அழைப்பு :ஊழல் புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் தாராளமாக தங்களை தொடர்பு கொண்டு, தெரிவிக்கலாம் என்று சி.பி.ஐ., அறிவித்துள்ளது. இது குறித்த புகார்களை, "போலீஸ் கண்காணிப்பாளர், சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாடஸ் சாலை, சென்னை-600 006, போன்: 28255899, பேக்ஸ்: 28213828. hobacchn@cbi.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
01 ஜனவரி 2010
காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது

காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் சிவகாஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிவ சிவா' என்ற படம் தயாராகிறது.
கதையின் நாயகனாக, குமரன் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுஹானி நடிக்கிறார். மகாநதி சங்கர், லட்சுமி பிரபா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, சிவாஷ் டைரக்டு செய்கிறார். மாறன், இசையமைக்கிறார். டி.புண்ணியமூர்த்தி தயாரிக்கிறார்.
சென்னையில் நடந்த 9 கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் செய்த கொடூர கொலைகள் ஆகிய உண்மை சம்பவங்கள் படமானது போல், கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள தேவநாதனின் கதையும் படமாகிறது.
இதுபற்றி சிவ சிவா' படத்தின் டைரக்டர் சிவாஷிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:
கோவில் அர்ச்சகர் தேவநாதனின் வாழ்க்கை வேறு. நாங்கள் படமாக்குகிற கதை வேறு. உலகமே தனது அம்மாதான் என்று ஒழுக்கமாக வாழ்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை, ஒரு இளம் பெண்ணின் வருகையால் எப்படியெல்லாம் மாறி, எவ்வளவு பெரிய குற்றவாளி ஆகிறான்? என்பதே இந்த படத்தின் கதை.
கதாநாயகனின் கதாபாத்திரம், கோவில் அர்ச்சகர் என்பது உண்மைதான் என்கிறார் டைரக்டர் சிவாஷ்.
அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாவதை முன்கூட்டியே கூறிவிட்டால், தணிக்கையின்போது பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், சிலர் வழக்குகள் தொடரக்கூடும் என்பதாலும், சிவ சிவா' படம் ரகசியமாக படமாகி வருவதாக கூறப்படுகிறது.


