
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உட்பட, மூன்று அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமணி; எலக்ட்ரிஷியன். இவர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். சமீபத்தில் செம்பரம்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் ஒயரிங் வேலை செய்தார். தொழிற்சாலை நிர்வாகம், கூடுதல் மின்சப்ளை தேவை என, செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் மனு கொடுத்தது. அவர், ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு மனுவை பரிந்துரை செய்தார். தொழிற்சாலை நிர்வாகிகள், பரிந்துரை கடிதத்தை ஜெயமணியிடம் கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் உதவி செயற்பொறியாளரிடமிருந்து சாத்திய அறிக்கை(தொழிற்சாலைக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என அளிக்கப்படும் சான்று) பெறும்படி அனுப்பினர்.
டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெயமணியிடம் கொடுத்து மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர். அதை ஏற்று பணத்துடன் நேற்று காலை 11 மணிக்கு ஜெயமணி, பென்னலூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உதவி செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, செம்பரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் திருநின்றவூரைச் சேர்ந்த அருணாசலம்(50) மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரியும் திருவள்ளூரைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோர் இருந்தனர். ஜெயமணி தன்னிடம் போலீசார் கொடுத்த பணத்தை வெங்கடாஜலபதியிடம் வழங்கினார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டார். அந்தப் பணத்தில் அருணாசலத்திற்கு 5,000, பெருமாளுக்கு 1,000 ரூபாய் வழங்கினார். அவர்களும் பெற்றுக் கொண்டனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். ஒரே நேரத்தில் லஞ்சம் வாங்கிய மூன்று மின்வாரிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மின் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக