திண்டிவனம் :பட்டா மாற்றம் செய்ய, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கிருஷ்ணன்(31). இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், நிலம் விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தின் பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ.,விடம் மனு செய்தார்.பெரியதச்சூர்(வடக்கு) வி.ஏ.ஓ., திருவேங்கடம் பட்டா மாற்றம் செய்வதற்கு 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின்னர் 4,000 ரூபாய் தர வேண்டுமென கூறியுள்ளார்.இது குறித்து கிருஷ்ணன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணம் 4,000 ரூபாயையும் கிருஷ்ணன் மாலை 6.45 மணிக்கு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திலிருந்த வி.ஏ.ஓ., திருவேங்கடத்திடம் கொடுத்தார்.அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ஏட்டுகள் ஜீவா, பாலு, அஷ்டமூர்த்தி, சுரேஷ், முருகானந்தம் உள்ளிட்ட குழுவினர் திருவேங்கடத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட திருவேங்கடம், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 ஆகஸ்ட் 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக