06 ஜனவரி 2010
லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அமுதா கைது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமார். இவர் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்தபின், அடகு நகை ஏலதாரராக உரிமம் பதிவு பெறுவதற்காக கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அதற்காக, தாசில்தார் எஸ்.அமுதா (வயது52), ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், இது குறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார்.
போலீசார் ஏற்பாடு செய்தபடி, ராஜகுமார் ரூ.1000 லஞ்சம் கொடுத்தபோது, அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தாசில்தார் அமுதாவை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரிடம் போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தி கைது செய்தனர். தாசில்தார் அமுதா இன்னும் 2 மாதத்தில் துணை கலெக்டராக பதவியேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக